G.C.E. O/L – சந்திபிரித்து எழுதுதல், கடந்தகால வினாக்கள்

சந்திபிரித்து எழுதுதல் கடந்தகால வினாக்கள்

 

G.C.E O/L – 2024(2025), பகுதி2

01. (ii). பின்வரும் தொடரைப் பதம் பிரித்து எழுதுக.
வீழுமோரிடையூறு
வீழும் + ஓர் + இடை + ஊறு

G.C.E O/L – 2023(2024), பகுதி – 2
01. (ii). பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
அழுவானை யிவன்யா ரென்று
அழுவான் + + இவன் + யார் + என்று

G.C.E O/L – 2022(2023), பகுதி – 2
01. (i). பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
பூட்டித் திறந்தெடுக்கும் பொருள்
பூட்டி + திறந்து + எடுக்கும் + பொருள்

G.C.E O/L – 2021(2022), பகுதி2
01.(i).
பின்வரும் தொடரைப் பிரித்து எழுதுக.
பங்கப் பழனத் துழுமுழவர்
பங்கம் + பழம் + அத்து + உழும் + உழவர்/
பங்கம் + பழனத்து + உழும் + உழவர்

G.C.E O/L – 2020, பகுதி – 2
01. (i).கணக்காயரில்லாதவூர்எனும் சொற்றொடரை ம் பிரித்தெழுதுக.
கணக்காயர் + இல்லாத + ஊர்/
கணக்கு + ஆயர் + இல்லாத + ஊர்

G.C.E O/L – 2019, பகுதி2
01. (Vii ) பின்வரும் சொற்றொடரை சந்திபிரித்து எழுதுக.
கூனலிளம்பிறை
கூனல் + இளம் + பிறை/
கூனல் + இளமை + பிறை

G.C.E O/L – 2018, பகுதி2
01. (i ) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக.
பொலிந்தசெழுந்தாதிறைக்கும்
பொலிந்த + செழும் + தாது + இறைக்கும்

G.C.E O/L – 2017, பகுதி2
01. (i ). பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக.
மெலிந்தப் பிறைக்கும் விழி
மெலிந்து
+ அப்பு + இறைக்கும் + விழி

G.C.E O/L – 2016, பகுதி – 2
01. (i ) பின்வரும் தொடரைச் சந்திபிரித்து எழுதுக.
அங்கழியும்தான் தனதென்ற சிறுவட்டம்
அங்கு + அழியும் + தான் + தனது + என்ற + சிறு வட்டம்

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top