G.C.E.O/L-2018, தமிழ்மொழியும் இலக்கியமும், கடந்தகால வினாத்தாள் பகுதி 111,


 

 

G.C.E.O/L-2018,

தமிழ்மொழியும் இலக்கியமும்,

கடந்தகால வினாத்தாள்

பகுதி 111,

 

 

1. சுருக்கமான விடை தருக.

(i).மெல்லியர்பாற் கல்வி விரும்பாத வீணரெல்லாம்

எல்லையில்லா இன்படைதற்கிடையூறென்றே இயம்பாய்

() மெல்லியர் என்போர் யாவர்?

. பெண்கள்

() இங்குவீணர்எனக் குறிப்பிடப்படுபவர் யாவர்?

. பெண்கல்விக்குத் தடையான ஆண்கள் / பயனற்றவர்

 

(ii).மாத மூன்று மழையுள்ள நாடு

வருஷ மூன்று விளைவுள்ள நாடு

() இங்கு குறிப்பிடப்படும் நாடு யாது?

.திருக்குற்றாலம் / குற்றால மலை / குற்றால நாடு

() விளைவு என்பது எதனைக் குறிப்பிடுகிறது?

. விளைச்சல்

 

(iii).பொய்கை ஊரன் கேண்மை

செய்து இன்புற்றனெம் செறிந்தன வளையே

() ‘பொய்கை ஊரன்என்பவன் நானிலத்துள் எந்த நிலத்தைச் சேர்ந்தவன்?

. மருத நிலத்துக்குரியவன்

() வளைகள் செறிந்தமைக்கான காரணம் யாது?

. தலைவனுடனான நட்பை நினைத்தலால்

 

(iv).கைராசிக்காரி நீங்கள்தான் மாமி என்ர தலப்புள்ளய ஏந்தணும்.”

() இங்குகைராசிக்காரிஎனக் குறிப்பிடப்படுபவரின் பெயர் யாது?

. மூத்தம்மா

() ‘தலப்புள்ளஎனக் குறிப்பிடப்படுவது யாது?

. மூத்தபிள்ளை / தலைப்பிள்ளை / முதற்பிள்ளை

 

(v).ஏலம்பூ வாய் பொசுங்க

எரியுறது தீக்கொழுந்து

காலப்புனல் கனக்கும்

கண்ணீரையும் சுமந்து

() ‘ஏலம்பூ வாய்என்பதால் நீர் விளங்கிக்கொள்வது யாது?

. வாசனையுள்ள வாய் / நறுமணமுள்ள வாய்

() ‘காலப்புனல்என்பதில் இடம்பெற்ற அணி யாது?

. உருவக அணி

 

(vi).கான் ஆள உனைவிடுத்த கண்இலா

அருளிலிதன் காதல் மைந்தன்

() ‘கண்இலா அருளிலிஎனக் குறிப்பிடப்படுபவன் யார்?

. திருதராட்டினன்

() அவன்அருளிலிஎனச் சுட்டப்படுவதற்கான காரணம் யாது?

. கருணை இல்லாது /அருள் இல்லாது பாண்டவர்களைக் காட்டில் வாழும்படி அனுப்பியமை

 

(vii).மீசைக்கு விதைதூவி இளமை மழை பெய்ய

பயிர் முளைத்த பருவம்

() ‘இளமை மழைஎனக் குறிப்பிடப்படுவது எது?

. இளமைப் பருவம் / இளம் பராயம் / கட்டிளமைப்பருவம்

() ‘பயிர் முளைத்தல்என்பது எதனைச் சுட்டுகிறது?

. மீசை அரும்புதல் / மீசை முளைத்தல்

 

(viii).மண்ண நம்பி ஏலேலோ மரமிருக்க ஐலசா

மரத்த நம்பி ஏலேலோ கிளையிருக்க ஐலசா

கிளைய நம்பி ஏலேலோ இலையிருக்க ஐலசா

இலைய நம்பி ஏலேலோ பூவிருக்க ஐலசா

பூவ நம்பி ஏலேலோ பிஞ்சிருக்க ஐலசா

() இந்தப் பாடலைப் பாடும் தொழிலாளர் யாவர்?

. மீனவர்

() இந்தப் பாடல் வரிகளினூடாகக் கவிஞர் எதனைப் புலப்படுத்த விரும்புகிறார்?

. ஒன்றில் ஒன்று தங்கியிருத்தல் என்ற நம்பிக்கை

 

(ix).இந்த பைல் இஞ்ச எப்பிடி வந்தது?” என்றேன்.

() ‘பைல்என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழ் வடிவம் யாது?

. கோப்பு / கோவை

() ‘இஞ்ச எப்பிடிஎன்ற பேச்சு வழக்குத் தொடரின் எழுத்து வடிவத்தை எழுதுக.

. இங்கு எப்படி / இங்கே எப்படி

 

(x).தாழு முள்ளத்தர், சோர்வினர், ஆடு போல் தாவித்தாவிப்

பல பொருள் நாடுவோர்

() இங்கு ஆட்டின் செய்கை யாருக்கு உவமிக்கப்பட்டுள்ளது?

. பலபொருள் நாடுவோருக்கு

() முயற்சியற்றவர் இயல்புகள் இரண்டினைத் தருக.

. தாழ்வான உளங் கொண்டிருத்தல்

சோர்வு கொண்டிருத்தல்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top