G.C.E .O/L, குகப்படலம், கடந்தகால வினாத்தாள்


கவனத்திற்கு

இலக்கிய கட்டுரை வினாக்களுக்கு இக்குறிப்புக்களை ஆதாரமாக கொண்டு கட்டுரையாக விரிவாக எழுதவேண்டும்.


 

G.E.C.O/L

குகப்படலம்

கடந்தகால வினாத்தாள்

G.E.C.O/L-2024(2025)

01. (v). “கடுமையார் கானகத்துக் கருணையார் கலி ஏக

() கடுமையார் கானகத்துக்கு ஏகியவரின் பெயர் யாது?

(). இராமன்
() இங்குகலிஎன்பதன் பொருள் யாது?

(). கடல்

3. கம்பராமாயணம்குகப் படலத்தில்‘,

() கோசலையின் பெருமை

உறவினர்கள் மாத்திரமின்றி தேவர்களும் வணங்குகின்ற பெருமையுடையவள்.

அரசர்கள் தன்னைக் காண்பதற்காக தங்கியிருக்கும் முன்றிலையுடைய தசரதனின் முதல் மனைவி

மூன்று உலகும் ஈன்றவனாகிய பிரமனை முன்னீன்ற ஸ்ரீநாராயணனின் அவதாரமாகிய இராமனை மகனாகப் பெற்றவள்.

அடைய வேண்டிய அரசுச் செல்வத்தை பரதன் காரணமாகத் துறந்த காரணத்தால் பெரியாள் எனச் சிறப்பிக்கப்படல்.

() பாத்திர உணர்ச்சிகளை வெளிப்படுத்துவதில் கம்பன் காட்டும் திறன்

ஆகியன வெளிப்படுமாற்றை விளக்குக?

(). துயர உணர்வு :

இராமன் பின்பு பிறந்தானும் உளன்…..

நெடிது வீழ்ந்து அழுவானை….

நைவீர அலீர் மைந்தீர்…..

கன்று பிரி காராவின் துயருடைய கொடி

பாழ்த்த பாவிக் குடரிலே நெடுங்காலம் கிடந்தேற்கு உயிர்ப்பாரம் குறைந்து தே …..

தன்னுடைய உணர்ச்சி வெளிப்பாடு, கம்பருடைய கவிக்கூற்றாக வெளிப்படுத்தல்,ஒருவர் இன்னொருவரை வெளிப்படுத்தல்.

வியப்புணர்வு :

யான் பிறத்தலால் துறந்த பெரியாள்

மகிழ்ச்சி :

நாடு இறந்து காடு நோக்கி மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலமாயிற்றாம்

ஐவீரும் ஒருவீராய் அகலிடத்தை நெடுங்காலம் அளித்தீர்.

வெறுப்புணர்ச்சி :

படர் எல்லாம் படைத்தவள்

பழி வளர்க்கும் செவிலி

உடர் எல்லாம் உயிர் இல்லா எனத் தோன்றும் உலகத்தே ஒருத்தி அன்றே இடர் இல்லா முகத்தாளை

சுடு மயானத்திடை தன் துணை ஏக தோன்றல் துயர்க்கடலின் ஏக கடுமையார் கானகத்து கருணையார் கலி ஏக

நினைந்து செய்யும் கொடுமையால் அளந்தாள்

அன்புணர்வு :

அன்பின் நிறைந்தாளை

G.E.C.O/L-2023(2024)

01. (iii). “தோன்றல் துயர்க்கடலின் ஏகஇங்கு.

() தோன்றல் எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

(). பரதன்

() இதில் இடம்பெற்றுள்ள அணியை இனங்காண்க.

(). உருவக அணி / துயர்க்கடல்

01. (iv). “கன்றுபிரி காராவின் றுயருடைய கொடி

() கொடி எனக் குறிப்பிடப்படுபவள் யார்?

(). கோசலை

() அவளுடைய துயரம் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது?

(). கன்றைப் பிரிந்த பசுபோல என்ற உவமை மூலம்

G.E.C.O/L-2022(2023)

01.(ix). “நெறி திறம்பாத் தன்மெய்யை நிற்பதாக்கி இறந்தான் தன் இளந்தேவி

() ‘இளந்தேவிஎனப்படுபவள் யார்?

) சுமித்திரை

() இங்கு தசரதனுடைய எச்சிறப்பு உணர்த்தப்படுகின்றது?

ஆ) வாய்மை தவறாமை

3. குகப்படலத்தில்,

(அ) குகனது
சிறப்பு

கோசலைக்குக்
குகனைப் பரதன்
அறிமுகப்படுத்திய
பொழுது, இராமனின்

தோழனாகவும்
தனக்கும் இலக்குவனுக்கும்
சத்துருக்கனுக்கும்
அண்ணனாகவும்

குறிப்பிடுகின்றமை.

குன்றனைய திருநெடுந்தோள்’
என உடல் வலிமையைப்
பாராட்டுகின்றமை.

இராமன் முதலியோர்க்குச்
சகோதரனாக குகனைக்கோசலை
வாழ்த்துகின்றமை.

‘கைவீரக்களிறு’
எனவும் ‘காளை’ எனவும்,
அவனது வலிமையைப்போற்றுகின்றமை.

இராமன் காடு
சென்றதனால் இத்தகைய
வீரனுடைய உறவு
கிடைத்தமையையிட்டுக்
கோசலை பெருமிதம்
அடைகின்றமை.

கைகேயியைப்
பரதன் இழித்துக்
கூறியபோதும் குகன்
அவளை வணங்கியமை.

தன் பிள்ளைகளுக்குச்
சமமாக குகனைக்
கோசலை மதித்தமை.

வேடுவர்களின்
சிறந்த தலைவன்.

(ஆ) கைகேயியின்
இழிவு

ஆகியன
வெளிப்படுமாற்றினை
விவரிக்குக.

தன் கணவனான
தசரத மன்னனைச்
சுடுகாட்டிற்கு
அனுப்பியவள்.

தன் மகன் பரதனைத்
துன்பக் கடலில்
மூழ்கச் செய்தவள்.

கருணைக் கடலாகிய
இராமன் கொடிய காட்டிற்குச்
செல்லக் காரணமானவள்.

உலகம் முழுவதையும்
துன்பத்திற்குள்ளாக்கியவள்.

பழி வளர்க்கும்
செவிலி.

கைகேயியின்
வயிற்றில் பிறந்தமையை
இழிவாகப் பரதன்
கருதியமை

இராமனைப் பிரிந்தமையால்
உடல்கள் எல்லாம்
உயிர் இல்லாதன
போலத் தோன்றும்
இவ்வுலகில்,

இவள் ஒருத்தி
மட்டுமே துன்பம்
இல்லாத முகத்தையுடையவளாக
விளங்கியவள்.

G.E.C.O/L-2020

01. (v). “அறந்தானே என்கின்ற அயல் நின்றாள்தனை நோக்கி,

ஐய அன்பின் நிறைந்தாளை உரை

() ‘அயல் நின்றாள்எனக் குறிப்பிடப்படுபவள் யார்?

. சுமித்திரை

() ‘ஐயஎன விளிக்கப்படுபவன் யார்?

. பரதன்

G.E.C.O/L-2019

01. (v). “கொற்றத்தார்க் குரிசில் இவர் யார்?”

() இவ்வாறு வினவியவர் யார் ?

. குகன்

() ‘கொற்றத்தார்க் குரிசில்எனக் குறிப்பிடப்படுபவர் யார்?

. பரதன்

3. குகப்படலத்தில்,

() பரதனின் துயரம்

பரதனின் கூற்றுக்களூடாகப் பரதனின் துயர நிலை காட்டப்படுதல்

இராமனை மகனாகப் பெற்றதால் கோசலை பெறவேண்டிய அரசுச் செல்வத்தை தான் பிறந்த காரணத்தால் இழந்த பெருமைக்குரியவள் என பரதன் குற்றவுணர்ச்சியுடன் கூறுதல்.

கைகேயியின் பாழான தீவினையுடைய வயிற்றிலே நீண்ட நாட்கள் தங்கியிருத்தலால் உயிராகிய சுமை குறைந்து தேய்தல் எனல்.

கவிக் கூற்றினுடாகப் பரதனின் துயரநிலை காட்டப்படல்

தோன்றல் துயர்க் கடலினேக …… “

கோசலையின் கூற்றினுடாகப் பரதனின் துயர நிலை காட்டப்படுதல்.

நைவீர் அலீர் மைந்தீர் இனித்துயரால் ……. “

இராமனுடன் சேர்ந்து செல்லும் பேறு பெற்ற இலக்குவனுடன் ஒப்பிட்டு, தன்னிலை குறித்து வருந்துதல்.

இராமன் பின்பு பிறந்தானும் என்னப் பிரியாதான் ……. “

() சுமித்திரையதும் இலக்குவனதும் புகழ்

என்பன விவரிக்கப்படுமாற்றை விளக்குக.

. சுமித்திரை :

அறமே வடிவெடுத்து வந்தவள் என்று சொல்லத்தக்கவள்.

அன்பால் நிறைந்தவள்.

சத்தியத்தை நிலைபெறச் செய்து இறந்த தசரதனின் இளைய பட்டத்தரசி.

இராமனை விட்டுப் பிரியாத இலக்குவனைப் பெற்றறெடுத்த பெரியாள்.

இலக்குவன் :

யாவராலும் தொழத்தக்க இராமனின் பின்பு பிறந்தவன்.

இராமனுக்குத் தம்பிஎனத் தெரியும் படியாக இராமனை என்றைக்கும் விட்டுப் பிரியாதவன்.

G.E.C.O/L-2018

04. குகப்படலத்தில்,

() பரதன் கோசலையை குகனுக்கு அறிமுகம் செய்தல்

. “கோக்கள் வைகும் முற்றத்தான்என தசரதனைச் சிறப்பித்து அவனின், ‘முதற்தேவிஎன கோசலையையும் உயர்த்திக் கூறுதல்.

மூன்றுலகும் ஈன்றவனான பிரமனை, முன்னீன்ற ஆதிமூலமாகிய பரம்பொருளையே மகவாகப்பெற்றவள் எனச் சிறப்பித்தல்.

இராசமாதாஎன அடைந்திருக்க வேண்டிய உயர்நிலையை பரதன் பொருட்டுத் துறந்த கோசலையை, பெரியவள் எனப் பாராட்டுதல்.

யான் பிறத்தலாற்றுறந்தஎன, பரதன் கூறுவதாகக் காட்டப்படுவதன் மூலம் அவனின் தன்வெறுப்புணர்ச்சியைக் காட்டுதல்.

() கோசலை கூறிய வாழ்த்துரை

ஆகியவற்றினூடாகக் கம்பனின் கவியாற்றல் புலப்படுமாற்றை விபரிக்குக.

. நாட்டை விட்டுக் காடு சென்றமையை, துயர் என்னாமல் நலம் என்று கூறுதல் ( குகனின் நட்புக்கிடைத்தமையால்)

கைவீரக் களிறு அனைய காளைஎன உவமை, உருவக வாயிலாக குகனின் வீரத்தைப் பாரட்டுதல்.

ஐவீரும் ஒருவீராய்என வேடுவனான குகனை ராமனின் சகோதரனாய் அங்கீகரித்தமையைச் சுட்டுதல்.

நீண்டகாலம் நாட்டை அனைவரும் ஒற்றுமையாக ஆளுங்கள்எனப் பாராட்டிக் கூறுதல்.

G.E.C.O/L-2016

01. (ii). -… கழற்கான் மைந்த

இன்றுணைவ னிராகவனுக் கிலக்குவற்கு

மிளையாற்கு மெனக்கு மூத்தான் … “

() இப்பாடலடிகளில் மூத்தான் எனக் குறிப்பிடுவது யாரை?

). குகன்

() ‘இளையவன்எனக் குறிக்கப்படுபவன் யார்?

). சத்துருக்கன்

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top