திணை

திணை


தமிழில் பெயர்ச்சொற்கள் உயர்திணைப் பெயர், அஃறினைப் பெயர் என இரு பெரும் பிரிவுகளாக வகைப்படுத்தப்படுகின்றன. பொது வாக மனிதரைச் சுட்டும் பெயர்கள் உயர்திணை என்றும், மனிதர் அல்லாத ஏனைய உயிருள்ள உயிரற்ற பொருள் அனைத்தையும் சுட்டும் பெயர்கள் அஃறினை என்றும் வகைப்படுத்தப்படும்.

"உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே" என்பது தொல்காப்பியப் பொருளதிகாரத்தில் உள்ள நூற்பா

.
ஆறறிவுடைய மக்கள், தேவர், நரகர் ஆகியோரை உயர்திணை என்றும், மற்ற உயிரினங்கள் மற்றும் உயிரற்ற பொருட்களை அஃறிணை என்றும் வகைப்படுத்துகிறது. தொல்காப்பியர் மக்கள் சுட்டு உடையரல்லாதவற்றை அஃறிணை என்கிறார், அஃதுஅல்‘ + ‘திணைஎனப் பிரியும்.

மக்கள், தேவர், நரகர் என்று உயர்திணையில் குறிப்பிடப்பட்டோரில் உயிர் இல்லாத உடலும் (பிணம்) அஃறிணை என்றே குறிக்கப்படும்.
மக்கள் தேவர் நரகர் உயர்திணை
மற்று உயிர் உள்ளவும் இல்லவும் அஃறிணை
(
நன்னூல் : 261)

மக்களும் தேவரும் நரகரும் உயர்திணை எனப்படுவர். இவர்கள் தவிர ஏனைய உயிர் உள்ள பொருள்களும் உயிர் இல்லாத பொருள்களும் அஃறிணை எனப்படும்.

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top