சங்ககாலம்
வினாவிடை(சுருக்கக்குறிப்புக்கள்)
சங்க கால அகத்திணை இலக்கியங்களில் தனித்துவமான பண்புகளைக் குறிப்பிடுக?
மனமொத்த காதலர் இருவர் தமக்குள் துய்த்த இன்பம் இத்தன்மையானது என வெளிப்படுத்த முடியாத அகவயமான உணர்வு அகம் எனப்படும்.
அது ஏழு வகையான இயல்புடையது.
அன்பின் ஐந்திணை அன்புடைக் காமமாகிய தூய காதலொழுக்கம்.
கைக்கிளை – ஒரு தலைக்காதல்
பெருந்திணை – பொருந்தாக் காமம்
. "மக்கள் நுதலிய அகனைந்திணையும் சுட்டி ஒருவர் பெயர்கொளப் பெறார் என்ற வரையறைக் கட்டுப்பாட்டினை உடையது.
முதல், கரு, உரி என்ற புலநெறி வழக்கு பின்பற்றப்பட்டது.
நாடக வழக்கினையும் உலகியல் வழக்கினையும் அடிப்படையாகக் கொண்டிருந்தமையால் பாத்திரக் கூற்றுக்காளாக அமைந்திருந்தன.
குறிப்பாகப் பொருள் உணர்த்தும் உள்ளுறை உவமம் இறைச்சிப் பொருளைக் கொண்டிருந்தன.
ஓர் ஒழுக்கம் ஒரு தனிச் செய்யுளில் கூறப்பட்டிருக்கும்.
அகத்திணைப் பாடல்கள் யாவும் அகவற்பாவினால் ஆக்கப்பட்டன.
பிறமொழிக் கலப்பற்ற தூய தமிழ்ச் சொற்களினாலான இறுக்கமான மொழிநடையில் அமைந்துள்ளது. சுருங்கிய சொல்லினால் விரிந்த பொருளை உரைக்கும் இயல்பு காணப்பட்டது.
சங்க காலப் புறத்திணை இலக்கியங்களின் தனித்துவமான பண்புகளை எடுத்துக்காட்டுக?
மக்களின் புறவயமான உணர்வு புறத்திணை எனப்பட்டது. பழந்தமிழ் மக்களின் புறவாழ்வில் முக்கியத்துவம் பெற்ற வலிமை தொடர்பான போரியல் அம்சங்களும் ஐவகையாகவே குறிப்பிடப்பட்டன.
ஆநிரைகளைக் கவர்தலும், கவர்ந்தவற்றை மீட்டலும் வெட்சிப் போர் எனப்பட்டது.
பாசறை அமைத்துப் போர் செய்தல் வஞ்சிப்போர் எனப்பட்டது.
கோட்டைகளைத் தகர்த்தலும், பாதுகாத்தலும் உழிஞைப் போர் எனப்பட்டது.
இறுதி வரை போராடுதல் தும்பைப் போர் எனப்பட்டது.
வெற்றியின் அடையாளம் வாகை எனப்பட்டது.
அரசர் பெருமக்களின் கொடைத்திறம், தண்ணளி, நட்பு முதலான விழுமிய குணங்களையும் அவர் தம் செயற்கரிய செயல்களையும் புகழ்ந்துரைப்பது பாடாண் திணையாகும்.
யாக்கை.செல்வம், இளமை முதலிய பல வழிகளிலும் நிலையற்ற இவ்வுலகின் இயல்பை எடுத்துரைப்பது காஞ்சித்திணையாகும்.
புறப்பாடல்களில் அரசர்களை நன்னெறிப்படுத்தும் அறக்கருத்துக்கள் செவியறிவுறுத்தலாகவும் பொருண்மொழிக் காஞ்சியாகவும், வாழ்த்தாகவும் கூறப்பட்டது.
. பெயர் சுட்டிப்பாடும் காதற் பாடல்களும் புறத்தினையின் பாற்படும்.
அரசரின் வீரம், கொடைச் சிறப்பு முதலானவற்றை புகழ்ந்துரைப்பதற்கு ஆற்றுப்படை இலக்கியம் ஓர் உத்தியாகப் பயன்படுத்தப்பட்டது.
உ – ம் : பொருநராற்றுப்படை கரிகாலனின் சிறப்பைப் பாடியது.
புறப்பாடல்கள் பாத்திரக் கூற்றுக்களாகவும் புலவர் கூற்றுக்களாகவும் அமைந்திருந்தன.
புறப்பாடல்கள் அகவற்பாவிலும், வஞ்சிப்பாவிலும் பாடப்பட்டன.
புறப்பாடல்கள் புரவலர்களை படர்க்கையிலும் முன்னிலையிலும் பாடின.
புறப்பாடல்களில் உலக உறவுப் பண்புகள் இடம்பெற்றிருந்தன.
உ–ம் : யாதும் ஊரே யாவரும் கேளிர்
சுருங்கிய சொல்லும், விரிந்த பொருளும் கொண்ட மொழிநடை
போரிட்டவர்கள், போர்க்கருவிகள், போர்க்காரணம், போரின் விளைவுகள் போன்றனவும் இடம்பெற்றிருந்தன.
![]()