தமிழ் இலக்கிய நயம்
தரம்;-11
தெளிவு சிறுகதை வினாவிடை
சிறுகதை ஆசிரயர் மு.பஷீர் பற்றிய அறிமுகம்
இவர் கம்பஹா மாவட்டத்தில் மினுவாங்கொட பிரதேசத்தில் கல்லொழுவ கிராமத்தில் பிறந்தவர்.
சுமார் நான்கு தசாப்தங்களாக இலக்கிய உலகில் காலூன்றி நிற்பவர்.
இவரது படைப்புக்கள் சமூகத்தின் யதார்த்தத்தை (உண்மை நிலையைப்) பேசுபவை; கலைத்துவம் மிக்கவை.
இவர் கையாளும் மொழியும், விடயச் செறிவும் எளிமையும் உணர்வோட்டமும் கொண்டமைகின்றது.
1986 இல் ‘மீறல்கள்‘ கதையுடன் இலக்கிய உலகில் பிரவேசித்த இவர் மீறல்கள், தலைமுறை இடைவெளி, உட்பட நான்கு சிறுகதைத் தொகுதிகளைத் தந்துள்ளார்.
இவரது இலக்கியப் பணிக்காக அரசு, கலாபூஷணம் விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளார்.
தபால், தபாற்காரன் என்ற தொடர்பாடல் ஊடக நபர் அன்றைய நிலை
தபால் என்ற தொடர்பாடல் ஊடகம் தற்காலத்தில் பெறுமதியின்றிக் காணப்பட்டாலும் ஒரு காலத்தில் அதுவே இன்பதுன்பங்களைச் சுமந்து வருவதாக அமைந்தது.
அந்த நாட்களில் அதிகாலை வேளையில் தபாற்காரர்களின் வருகை ஒவ்வொருவராலும் ஆவலோடு எதிர்பார்க்கப்படும்.
வெளிநாட்டுப் பயணம், பரீட்சைப் பெறுபேறுகள், உறவுக்காரர்களின் தகவல்கள் இப்படிப்பலவற்றைச் சுமந்துவரும் தெய்வதூதனாகவே தபாற்காரன் வரவேற்கப்பட்டான்.
(இச் சிறுகதை தபாற்காரர் ஒருவரின் நிலையைச் சுவைபட விபரிக்கின்றது.)
01. சிறுகதை ஆசிரியரின் ‘தெளிவு‘ என்ற சிறுகதையினை அடிப்படையாகக் கொண்டு
பின்வருவனவற்றைத் தெளிவுபடுத்துக.
அ. கிராமத்தை வர்ணிக்கும் சிறப்பு.
பாதைகளில் மேடு பள்ளம் காணப்படுதல்.
பிரயாணத்துக்காகச் சைக்கிளின் உபயோகம்.
நிழல் படுத்துறங்கும் (இருள்) குறுகலான செம்மண் பாதைகள்
வெள்ளைப் புறாக்கள் துள்ளிக் குதிக்கும் கலவன் பாடசாலை.
விழுது பரப்பி அடர்ந்து செறிந்த ஆலமரம்.
துல்லியம் துலங்கும் இறை இல்லமாம் பள்ளிவாசல்.
குச்சில் வீடுகள், தேனீர்க் கடைகள்.
குப்பைக் கடுதாசிகளை மென்று சுவாரசியமின்றிச் செல்லும் கால்நடைகள்.
செயற்கை முகம் தரிக்காத கிராமத்துப் புன்சிரிப்புக்கள். (யதார்த்த நிலை)
கிராமத்தில், கடிதத்தில் காணப்படும் நாமத்தில் உள்ளவரைத் தபாற்காரனுக்குத்
தெரிந்திருத்தல்.
ஆ. உவமைகளைக் கையாளும் ஆளுகைத் திறன்
அடுக்களையை உருட்டும் பூனையாய் – படபடப்புடன் செயற்படல்.
வெசாக்காலத்துத் தோரண பல்ப்புகளாய் ஆச்சரியத்துடன் பார்த்தல்
ஆந்தைவிழி ஒளி உமிழ்ந்தன.
இந்த எருமைக் காம்பிலிருந்து மேலதிகமாகப் பால் சுரக்கப் போவதில்லை – வரட்சி
யானையின் செவியில் அங்குச முனையால் துன்பப்படுத்தல்
குத்தி அவஸ்தை கொடுப்பது போல்
ஊர்த் துன்பங்களை எல்லாம்
கட்டி அழ நமக்கு ஏது நேரம் தன் துன்பமே தலைக்கு மேல் வேறு எதைப்பார்ப்பது
பொன்மீனைக் கௌவிய நாரையாக – அழுங்குப் பிடி
பெண்ணின் மன இயல்புகள் பாதிக்கு
மேல் குழந்தைத்தனமானது
பெண்ணின் மனம் ஒன்றுமறியாதது.
பாம்பை மிதித்துவிட்ட பயம் – அதிர்ச்சியுடன் கூடிய பயம்
குமைந்து கனக்கும் உள்ளத்தை ஆசுவாசப்படுத்தல் – உள்ளத்தைச் சமாதானப்படுத்தல்
02. ‘தெளிவு‘ என்ற சிறுகதையில் குடும்ப வாழ்வின் இன்பதுன்பங்களை ஆசிரியர் பதிவு செய்துள்ளார். தெளிவுபடுத்துக.
உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை நனைக்கிறது. (வியர்வை)
மேடு, பள்ளம் எனச் சைக்கிள் மிதித்ததில் கால் விரல்களில் ஊமை வலி
கையில் கடிதக் கட்டுகளுடன் வியர்வை நெடியோடு, ஊரை வலம் வருகின்றேன்
நிஷ்தாரு; ஒரே தல சுத்தா …. யிருக்கப்பா! வெலனலயிருந்து ஒண்டும் தின்னவுமில்ல ..
உடலைத் தள்ளாட வைத்து சோர்வு கனக்க.
என்ட மகள் சரீனா சவூதி பெயித்தி மூணு மாசமாவுது மகன்! சல்லியுமில்லை, காயிதமுமில்லை … பச்சப் புள்ள மூண்ட, ஏண்ட தலேல, பாரம் காட்டிட்டு பெய்திட்டா! இவ்வளவு
நாளும் சமது கடையில் அவள் அனுப்பினா தார என்டு சாமான் கடனுக்கு வேங்கின
இப்ப அவன் தார இல்ல மகன். நேத்து ராவையில் இருந்து, எல்லாம் பட்டினி. நான்
என்னத்த செய்ய …..
கிழவியின் துயரம் தோய்ந்த முகம், குழந்தைகளின் பசிக் கொடுமை.
இல்லத்தில் அடிக்கடி முகமுறிவுகள் ஏற்படுவதுண்டு.
கலியாண வூட்டுக்குப் போக ஆயிரம் ரூபாவுக்கு மேல வேணும். இப்ப வசதியில்லை!
கடன் கேட்க யாருமில்ல. பொறகு பார்க்கலாம்.
பாத்திமாவின் கோரிக்கை கட்டாயமாக நிராகரிக்கப்பட்டது.
என்ட பேரனுங்க, நெருப்பு மாதிரிக்காயுது! டொக்டர் கிட்ட போ எண்டாலும் எனக்கிட்ட ஐஞ்சி சதமாகிலும் இல்ல. நான் என்னத்தச் செய்ய மகன்; கல்பு கேட்குது இல்ல.
3. ‘தெளிவு‘ என்ற சிறுகதையில் பாரூக் நானாவின் (தபாற்காரனின்) ஏழ்மை நிலை புலப்படுத்துமாற்றைத் தெளிவுபடுத்துக.
உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை நனைக்கிறது.
மேடு, பள்ளம் என்று சைக்கிள் மிதித்ததில் கால் விரல்களில் ஊமைவலி.
கையில் கடிதக் கட்டுகளுடன் வியர்வை நெடியோடு ஊரை வலம் வருகிறேன்.
நிஷ்தாரு! ஒரே தல சுத்தா … யிருக்கப்பா! வெலனலயிருந்து, ஒண்டும் தின்னவுமில்ல ….
எதிலுமே பிடிப்பற்ற ஒரு மலட்டுச் சோகம் எனக்குள்.
இல்லத்தில் அடிக்கடி இப்படி முகமுறிவுகள் ஏற்படுவதுண்டு. எல்லாம் பொருளாதாரத்துண்டு விழலால் ஏற்படும் நிர்ப்பந்தங்கள்.
கலியாண வூட்டுக்குப் போறதெண்டா ஆயிரம் ரூபாவுக்கு மேல வேணும். இப்ப வசதி
யில்லை. கடன் கேட்க யாருமில்லை. பொறகு பார்க்கலாம். (பாத்திமாவுக்குக் கூறியது)
வாழ்க்கையில் ஏற்பட்ட ஏழ்மைநிலை சிலவற்றைச் செய்ய முடியாத நிலை. பேகத்தின் கடிதத்தைப் பிரித்து அதனுள் இருக்கும் நூறு ரூபாவை எடுக்க முனையும் நிலை.
பிறரது ஏழ்மை நிலையைக் கூட உணர முயாத அளவுக்கு பாரூக்கின் ஏழ்மை நிலை அவனது உள்ளத்தைத் தவறு செய்யத் தூண்டுகிறது.
04. ‘தெளிவு‘ என்ற சிறுகதையில் தபால்காரர் பாரூக் நானா வாழ்க்கையின் பஞ்சப்போராட்டத்தில் தவிக்கும் பாத்திரமாகவே சிருஷ்டிக்கப்பட்டுள்ளார். விளக்குக?
சம்பளம் பெறவேண்டுமென்பதற்காக, உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி நனைக்க; மேடு பள்ளம் என்று பாராது சைக்கிள் மிதித்ததில் கால் விரல்கள் ஊமை வலி; கையில் கடிதத்துடன் வியர்வை நெடியோடு ஊரை வலம் வருதல்.
பிறரிடம் கைநீட்டிப் பணம் வாங்கிக் காலைப் பசிக்கு இரைபோடும் பரிதாபகரநிலை.
நிஷ்தாரு! ஒரு தல சுத்தா …. யிருக்கப்பா! வெலனலயிருந்து, ஒண்டும் தின்னவுமில்ல …. பத்த ரூபா நோட்டு வேண்டும் நிலை.
கிழங்குப் பெட்டிஸை, வாயில் தள்ளுகிறேன், பாரூக் நானாக்கு, சாயம் கட்டியா ஒரு டீ போடு மவன்!
எதிலுமே பிடிப்பற்ற மலட்டுச் சோகம் எனக்குள் வாழ்க்கையைப் பீடித்துள்ள வறுமை நிலைமையானது மகிழ்ச்சியுடன் கதைக்க முடியாத, சிரிக்க முடியாது உள்ளத்தை இறுக்கிய நிலை
ஊர்த்துன்பங்களையெல்லாம் கட்டி அழ நமக்கு ஏது நேரம்? என்ற வெறுப்புணர்ச்சி பாரூக் தனது துன்பச் சுமையையே தூக்க முடியாத நிலையில், பிறர் துன்பம் பற்றிப்பேச அவன் மனம் இடங் கொடுக்கவில்லை.
வீட்டில் பொருளாதாரத்துண்டு விழலால் அடிக்கடி ஏற்படும் முகமுறிவுகள். காலையில் நடந்தேறிய போரில் பாத்தும்மா தன்மீது கோபம். கலியாண வீட்டுக்குப் போற அவளது கோரிக்கை கட்டாயமாக நிராகரித்ததன் விளைவு அது இப்ப வசதியில்லை! கடன் கேட்க யாருமில்லை. பொறகு பார்க்கலாம் என்ற வார்த்தைகள்.
நிராகரித்த குற்ற உணர்வு, இயலாமை மனம் இப்போது துயர இழை பின்னுகிறது,
யாராவது வந்து கைகொடுக்க மாட்டார்களா? என்ற ஏக்கம், உற்சாகமின்மை.
பொருளாதாரத் தாக்கம், குடும்பச் சுமை.
முன் செய்தறியாத ஒன்றைச் செய்யத்துணிதல், கடமையிலிருந்து சறுக்கி விழும் சலனம், விரல்கள் நடுங்குகின்றன.
கடிதத்தில் இருந்து நூறு ரூபாவை எடுக்குமளவுக்கு அவனது மனட் சாட்சியைப்
பஞ்சம் ஆட்கொண்டு, ஆட்டி வைக்கும் பரிதாபகர நிலை.
பிறரின் துன்பம் தன் துன்பமாக எண்ணிய அவனது குற்ற உணர்வு. கிழவியின் புலம்பல் செவிப்புலனின் கீறல் விழுந்த இசைத்தட்டின் ஒலியாய் விழுகின்றது. பணத்தை ஒப்படைக்கப்புறப்படல்.
5. ‘தெளிவு‘ என்ற சிறுகதையை ஆதாரமாகக் கொண்டு,
அ. மைமூன் கிழவியின் தோற்றமும் நிலையும்; வறுமையின்கொடுமை என்பவற்றை ஆசிரியர் சித்தரிக்குமாறு.
(I). மைமூன் கிழவியின் தோற்றமும் நிலையும்
மூச்சிறைக்க தள்ளாடிக் கொண்டே முன்னால் நின்றாள்.
வறுமைத் தூரிகை வரைந்த கோலங்கள்; முதுமை முகத்தில் சோகங்களாக முட்டித்தெறித்தன.
இந்தக் கண்கூடத் தெரியாத கிழவியை அல்லா சோதிக்கியான்.
(II). மாமூன் கிழவியின் வறுமையின் கொடுமை பிரதிபலிப்பு
ஏன்ட மகள் சரீனா சவூதி பெயித்து மூணு மாசமாவுது மகன்! சல்லியுமில்லை. காயிதமுமில்லை. பச்சப்புள்ள மூண்ட, ஏண்ட தலேல, பாரம் சாட்டிட்டு பெய்திட்டா! இவ்வளவு நாளும் சமது கடையில், அவள் அனுப்பினா தார என்டு, சாமான் கடனுக்கு வேங்கின. இப்ப அவன் தாரஇல்ல மகன். நேத்து ராவையில இருந்து, எல்லாம் பட்டினி. நான் என்னத்த செய்ய? இந்தக் கண் தெரியாத கெழவியை அல்லா சோதிக்கியான்.
ஏண்ட பேரனுங்க, நெருப்பு மாதிரிக் காயுது! டொக்டர் கிட்ட போவ எண்டாலும் எனக்கிட்ட ஐஞ்சி சதமாலும் இல்ல. யா அல்லாஹ் நான் என்னத்தச் செய்ய மகன். கல்பு (மனம்) கேட்குது இல்லை. அழுகையும், ஆத்திரமும் தொண்டையை அடைக்கிறது அவளுக்கு.
ஆ. பாரூக் நானா முன் செய்தறியாத தவறைச் செய்தற்காக அவனது மனச்சாட்சி அவனைக் கொன்றது என்பதை ஆசிரியர் அவலத்துடன் காட்டும் விதம்.
ஆ. தபால்காரர் பாரூக் நானாவின் மனச்சாட்சி அவரைச் சமாதானப் படுத்திக் கொல்லும் விதம்.
அடுத்தவர் உரிமையில் அனுமதியின்றித் தலையிடுவது எவ்வளவு பெரிய அநாகரிகம்.
நாகரிகம் செறிந்த மனிதன் எங்காவது இப்போது வாழ்கின்றானா?
அடுத்த வீட்டு அந்தரங்கங்களைக் கூட உளவு பார்த்துக் கைகால் சேர்த்து வெளியே போய்ப் பிரச்சாரப்படுத்தும் புத்திசாலிகள் உலகம் இது.
கடிதத்தைப் பிரித்துப் படிப்பதனால் குடிமுழுகிப் போகாது.
இதற்கு முன் செய்தறியாத ஒன்றைச் செய்வதனாலோ கடமையிலிருந்து சறுக்கி விழும்
சலனத்தினாலோ விரல்கள் நடுங்குகின்றன.
பாம்பை மிதித்துவிட்ட பயம் எனக்கு ‘கடிதம் இல்ல ஆச்சி நான் வாரேன் நேரம் பெயத்திட்டுது!
இ. இல்லத்திலே, குடும்பத்துக்கிடையில் அடிக்கடி முகமுறிவுகள் ஏற்படும் காரணத்தையும், பெண்ணைப் பெருமைப்படுத்தும் விதமும் பாரூக் மூலம் உயிரோட்டமாகக்காட்டப்படுமாறு.
இ. I. குடும்பத்தில் முகமுறிவுகள் ஏற்படும் விதம் காட்டப்படுமாறு.
குடும்பத்தில் ஏற்படும் வாக்குவாதத்தின் பிரதிபலிப்புத்தான் இந்த இராஜரீக உறவின் முறிவு என நிர்ணயம் செய்து கொண்டேன்.
இல்லத்தில் அடிக்கடி முகமுறிவுகள் ஏற்படுவதுண்டு எல்லாம் பொருளாதாரத் துண்டு விழலால் ஏற்படும் நிர்ப்பந்தங்கள்.
கொஞ்சம் உரக்கப் பேசிவிட்டால் இல்லாளின் வீடோ எதிர்ப்பும், கறுப்புக் கொடி தூக்கலும் ஒரு நான்கு நாளைக்கு வெற்றிகரமாக இருக்கும்.
பெண்ணுக்கும், சிறு குழந்தைகளுக்கும் பிடிவாதம் பிடிப்பதில் ஒரு இறுக்கமான உடன்பாடு உண்டு.
பெண்ணின் கோரிக்கையைக் கட்டாயமாக நிராகரித்ததின் விளைவே இந்த இடைவெளி.
II. பெண்ணின் பெருமை காட்டப்படும் விதம்
பெண்ணின் மன இயல்புகள் பாதிக்குமேல் குழந்தைத் தனமானது.
பெண்ணுக்கும் சிறு குழந்தைகளுக்கும் பிடிவாதம் பிடிப்பதில் ஒரு இறுக்கமான உடன்பாடு உண்டு.
ஆணின் உயிர்ப்புச் சக்தியே பெண் தானே? அவள் கலகலப்பின்றி முடங்கிப்போனால் எல்லாமே முடக்கம்தான்.
06.’தெளிவு‘ என்ற சிறுகதையில் பின்வருவன விளக்கப்படுமாற்றைத் தெளிவுபடுத்துக.
அ. ‘இல்லாள்‘ என்பதற்கு அண்ணா சொன்ன வாசகம்
அரிசி இல்லை! கறி இல்லை! அது இல்லை. இது இல்லை என்று பெண் சதாவும் அலட்டிக் கொள்வதால்த்தான் நமது முன்னோர்கள் அவளுக்கு இல்லாள் என்று பெயர் வைத்தார்கள். இது அண்ணா சொன்ன வாசகம்.
ஆ. இல்லாள் என்பதற்கு தபால்காரர் பாரூக் கூறும் விளக்கம்
பொருளாதாரத் தாக்கம் – குடும்பச் சுமை இவற்றால் மனைவி அடிக்கடி இல்லாமல் போகிறாள். தனது சுயத்தை – வாழ்க்கை அவலங்களில் இழக்கின்றாள். இதனால்த் தான் இல்லாள் என்று பெயர் வந்தது எனத் தபால்காரர் பாரூக் கூறினார்.
இ. இந்த உலகத்தின் போக்குப் பற்றி தபாற்காரர் பாரூக் கூறும் பாங்கு.
அடுத்தவர் உரிமையில் அனுமதியின்றித் தலையிடுவது எவ்வளவு பெரிய அநாகரிகம், நாகரிகம் செறிந்த மனிதன் எங்காவது இப்போது வாழ்கிறானா? அடுத்த வீட்டு அந்தரங்கங்களைக் கூட உளவு பார்த்து கைகால் சேர்த்து வெளியே போய் பிரச்சாரப் படுத்தும் புத்திசாலிகள் மலிந்த உலகம் இது.
ஈ. மழைக்கான அறிகுறியை ஆசிரியர் வர்ணிக்கும் விதம்
வானம் கறுப்புப் பர்தாவில் கவலை வளர்த்தது! கிழக்கின் கிரணங்கள், வீரியமிழந்து சோகம் சொரிந்தன. குளிர்காற்றும், குமைந்த மேகத்திட்டுகளும் மழை வர்ஷிப்புக்குக் குறியீடு காட்டின.
07. ‘தெளிவு‘ என்ற சிறுகதையில், கதாசிரியர் மு.பஷீர் வர்ணிக்கும் ஆற்றல் படைத்தவர் என்பதை உணர முடிகிறது. நியாயப்படுத்துக.
தெளிவு என்ற சிறுகதையைக் கதாசிரியர் வர்ணனைச் சிறப்புடன் உயிரோட்டமாகக் கதை சொல்லி வாசகரின் உள்ளத்தை ஈர்த்து விடுவதில் வெற்றி கண்டுள்ளார். இதற்குக் கதையினூடே எப்பொழுதும் வர்ணனைகள் பொருந்தப் பேசுவதும், வேண்டிய இடத்து உவமைத் தொடர்களைப் பயன்படுத்தியும் தனது கதைகூறும் பாங்கை வளர்ப்படுத்தி யுள்ளமையைக் காண முடிகின்றது.
பரீட்சைப் பெறுபேறு. வெளிநாட்டுப் பயணம், உறவுக்காரர்களின் தகவல்களைச் சுமந்து வரும் தெய்வத் தூதராகத் தபால்காரன் உவமிக்கப்படல்.
உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை நனைக்கிறது (வியர்வை):
சைக்கிள் மிதித்ததில் கால் விரல்களில் ஊமைவலி. (இனம் தெரியான வருத்தம்) காற்றை யாரோ கடத்திக் கொண்டுபோன பிரமையில் மரங்கள் சோகம் சுமக்கின்றன. (காற்று வீசவில்லை).
சிறகு முளைத்த மனித ஈக்கள் என்னை நோக்கி விரைகின்றன.
கனவிலும் நினைவிலும் கடிதக்காரனை ஆராதிப்பதில் ஆசுவதம் காணும் யுகம் இது.
அந்தியமற்ற யதார்த்தத்தில் ஒரு மழலையைப் போல மனதைப் பறி கொடுக்கிறேன்.
வெள்ளப் புறாக்கள் துள்ளிக் குதிக்கும் கலவன் பாடசாலை.
கோழிக்குஞ்சை அலகால் கவ்வி, அசகாயமாகப் பறக்க முயலும் காகமாய் அவன் நழுவுதல்.
. வானம் கறுப்புப் பர்தாவின் கவலை வளர்த்தது! கிழக்கின் கிரணங்கள் வீரியமிழந்து
சோகம் சுமந்தன, குளிர்காற்றும், குமைந்த மேகத்திட்டுகளும் மழை வர்ஷிப்புக்குக் குறியீடு காட்டின.
பொன் மீனைக் கௌவிய நாரையாக / அழுங்குப்பிடி
கின்னஸில் பதியுமளவுக்கு அப்படி ஒன்றும் இல்லை.
கீறல் வீழ்ந்த இசைத்தட்டின் ஒலியாய் கிழவியின் புலம்பல்.
இவ்விதம் கதைபூராகவும் வர்ணனைகளோடு பொருத்தமாகக் கதை கூறும் ஆற்றல் கதாசிரியருக்குச் செறிந்திருந்தது. எதனையும் வர்ணனை பொருந்தக் கூறும் இயற்கையான ஆளுமையும், மொழிச் செழுமை வளமும் அவரிடம் இருந்துள்ளமையை மேற்கண்டவற்றின் மூலம் காண முடிகின்றது.
8. கதாசிரியர் மு.பஷிர் திறம்படச் சிறுகதை எழுதும் ஆற்றல் படைத்தவர் என்பதைத் ‘தெளிவு‘ என்னும் சிறுகதை எவ்விதம் உறுதிப்படுத்துகிறது. நியாயப்படுத்துக?
(தெளிவு என்ற சிறுகதையின் தலைப்பின் பொருத்தப்பாடு)
கதையின் ஆரம்பம்
உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை நனைக்கிறது; சைக்கிள் மிதித்ததில் கால் விரல்களில் ஊமை வலி. இவ்விதம் வாசிப்போரின் ஊக்கத்தைத் தூண்டக் கதை தொடங்கும் பாங்கு போற்றத்தக்கது.
கதைக்கரு
தபாற்காரன் ஒருவனின் வாழ்க்கையின் வறுமையின் அவலங்களைச் சித்தரிக்கும் கருவைக் கொண்டதே ‘தெளிவு‘ என்னும் சிறுகதையாகும்.
வாழ்க்கையில் ஒவ்வொரு நடத்தையிலும் அவனது இயலாமையும் வறுமைப் பிடியல் இருந்து அவன் மீள படும்பாடும் மனத்தை உருக்கும் வகையில் சித்தரிக்கப்பட்டுள்ளது
உச்சி வெய்யில் உடலை வெப்பமேற்றி முதுகை நனைக்கிறது …. ‘ (வியர்வை)
உள்ளடக்கம்
வேதனையுடன் கலந்த கவலை தோய்ந்த வாழ்வியல் பயணம்.
கதையின் தொடக்கத்தில் இருந்து கதை முற்றுப்பெறும் வரை பிரதான பாத்திரம் தபாற்காரனின் வேதனைகளுடன் கலந்த வறுமையின் கொடுமை, அவனைச் சின்னாபின்னப்படுத்தி வேதனைப்படுத்தும் நிலைமைகள் உயிரோட்டமாக உள்ளத்தை உறுத்தும் வகையில் காட்டப்படுதல்.
நிஷ்தாரு! ஒரே தல சுத்தா ….. யிருக்கப்பா! வெலனயிலிருந்து, ஒண்டும் தின்னவுமில்ல ……
பசிக் களை வீட்டை நோக்கி விரைகின்றேன்.
இல்லத்தில் அடிக்கடி முகமுறிவுகள் ஏற்படுவதுண்டு. பொருளாதாரத் துண்டு விழலால் ஏற்படும் நிர்ப்பந்தங்கள்.
கலியாண வூட்டுக்குப் போறதென்றா ஆயிரம் ரூபாவுக்கு மேல வேணும்.
இப்ப வசதியில்லை! கடன்கேட்க யாருமில்லை. பொறகு பார்க்கலாம். குற்ற உணர்வினாலும் இயலாமையினாலும் மனம் இப்போது துயர இழை பின்னுகிறது. சூனிய வெறுமையும், உற்சாகமின்மையும் வாட்டித் தொலைக்கிறது.
கலியாண வீட்டுக்கு இன்னும் மூன்றே நாள்கள். யாராவது வந்து கைகொடுக்க மாட்டார்களா?
இந்தக் கடித்ததைப் பிரித்துப் படித்தால் என்ன? அடுத்தவர் உரிமையில் அனுமதியின்றித்தலையிடுவது எவ்வளவு பெரிய அநாகரிகம். கடித உறையைப் பேனா முனையின் உதவியோடு பிரித்தல். இதற்கு முன் செய்தறியாத ஒன்றைச் செய்வதினாலோ சறுக்கி விழும் சலனத்தினாலோ, விரல்கள் நடுங்குகின்றன. வாழ்க்கையில் ஏற்பட்ட கொடும் வறுமை நிலை பிறரது கடிதத்துள் வந்த பணத்தை எடுக்க ஆசைப்படும் அவனது பரிதாபகரமான நிலை. இவ்விதமாக உள்ளத்தைத் தொடுமாறு வறுமை காட்டப்படுதல்.
கதையை விரும்பிப் படிக்கத் தூண்டும் வர்ணனைப் பிரயோகம்
சிறகுகள் முளைத்த மனித ஈக்கள் என்னை நோக்கி விரைகின்றன.
நிழல் படுத்துறங்கும் குறுகலான செம்மண் பாதை.
பெண்சாதியைச் சவுதிக்கு அனுப்பிவிட்டு, பரம பக்தனாய் மாறிப் பள்ளியும் கையுமாய். தொப்பியும் தலையுமாய் வேஷம் தரித்த நிஷ்தார்.
கோழிக்குஞ்சை அலகால் கவ்வி, அசகாயமாய் பறக்க முயலும் காகமாக நழுவுதற்கு முயலல்.
இணைக் கதைப் பிரயோகம்
.மைமூன் கிழவியின் பரிதாபகரமான வறுமையின் கொடுமை காட்டப்படுதல்.
ஏண்ட பேரனுக்கு …. நெருப்பு மாதிரிக் காயுது! டொக்டர் கிட்ட போவ எண்டாலும்
எனக்கிட்ட ஐஞ்சி சதமாலும் இல்லை, யா அல்லாஹ் நான் என்னத்த செய்ய!’
கதையை வளர்த்துச் செல்லல்
வாசகர்கள் கதையை வாசிக்கத் தூண்டும் வகையில் பல்வேறு உத்திகள் மூலம்
வாசகர்களின் உள்ளத்தை ஈர்த்தல்.
தொடர்ந்து கதை கூறுதல்; அடுத்து என்ன அவலநிலை என வினா எழுப்பி வாசகர்களின் வாசிப்பினைத் தூண்டும் உத்திப் பாவனை.
வாழ்வியல் அம்சங்களையும், நிகழ்வுகளையும் யதார்த்தமாகத் தனது கதைக்குத் துணையாக அமைத்தல்.
(உ–ம்) இல்லத்தில் அடிக்கடி இப்படி முகமுறிவுகள் ஏற்படுவதுண்டு.
மண்வாசணை தோன்றக் கதை கூறல்
ஆசிரியர் தான் வாழ்ந்த மண்ணின் வாசனை தோன்றக் கதை கூறுதல்.
ஒன்ன … பஜாரில பாத்தன் காணல்ல! ஒனக்கு வெளிநாட்டுக் கடிதமொண்டு இருக்கி …!
இதற்கு மேல் எருமைக் காம்பிலிருந்து மேலதிகமாக, பால் சுரக்கப் போவதில்லை.
தொண்டையில் சளியிறுகி உமிழ்நீர் தடைப்படுகிறது.
கிழங்குப் பெட்டிஸை, வாயில் தள்ளிக் கொண்டே வாங்கிலில் சரிகிறேன்
மொழிப் பாவனை
தான் வாழ்ந்த மண்ணுக்கேற்ப பொருத்தமான பிரதேச மொழிப் பிரயோகம் கையாளப்பட்டிருத்தல்.
நிஷ்தாரு! ஒரே தல சுத்தா … யிருக்கப்பா. வெலனயிருந்து ஒண்டும் தின்னவுமில்லை.
பாரூக் நானாக்கு, சாயம் கட்டியா ஒரு டீ போடு மவன்!
பச்சப்புள்ள மூண்ட, ஏண்ட தலேல பாரம் சாட்டிட்டு பெய்திட்டா!
கதையின் முடிவு
குடும்பத்தில் ஏற்பட்ட முகமுறிவு நீங்குதல்; மனைவியின் அன்பு கலந்த வார்த்தைகளின் கனிவு.
"நில்லுங்க! இந்த கோப்பிய குடிச்சிட்டுப் போங்க. ராவும் பசியில இருந்திட்டு …. ‘
குடும்பத்தில் அந்நியோன்யம், அன்பு பரிமாறப்படுதல்.
பசியிருந்தும் உணவு வெறுத்தது. உள்ளத்தில் உக்கிரமான புயல். நெருஞ்சி முள்ளா நினைவுகள்!
மனச்சாட்சி கொல்லுதல்; தவறு செய்தவன் திருந்தினால் மன்னிக்கப்படுகிறான். எடுத்த அமானிதத்தைக் கொண்டு கிழவியிடம் கொடுக்கச் செல்லும் அவனது திருந்திய நிலை.
இவ்விதம் தெளிந்த உள்ளத்துடன் இறுதியில் அவனது பயணம் தொடர்வதாக இச்சிறுகதை தலைப்புக்குப் பொருத்தமாகவும். சிறுகதைகளுக்குரிய சகல அம்சங்களும் பொருத்தமான முறையில் புகுத்தப்பட்டு கதை கூறப்பட்டுள்ளதால் ஆசிரியர் திறம்படச் சிறுகதை படைக்கும் ஆற்றலும். தகுதியும் படைத்தவர் என்பது வெள்ளிடை மலையாகும்.
![]()