இலக்கியத்தின் பயன்கள்
நாம் வாழும் உலகத்தைப் பற்றிய எண்ணங்களும் ஆசைகளும் ஏனைய நலன்கள் யாவற்றையும் எழுத்து வடிவில் காணும் ஆர்வத்தின் இலக்கியத்தைப் படைக்க அடிப்படையில் விரும்புகிறார்கள். முதலில் இலக்கியம் என்பது இன்பம் பயப்பதாகவே கருதப்பட்டது. பிற்காலத்தில் அதன் சமூக பெறுமானமும் கருத்திற் கொள்ளப்பட்டது.
மேலும், கற்பனைக்கு வடிவம் கொடுக்க வேண்டுமென்ற ஆற்றலின் காரணமாகத் தாம் காணும் உலகத்தின் பிரதிபலிப்பினைத் தம் கருத்துக்களினூடாக வெளிப்படுத்த எண்ணியதின் விளைவாகவும் இலக்கியம் தோன்றுகிறது. தன்னிடம் மட்டுமன்றி தன்னுடைய அநுபவங்கள் மட்டுமன்றி பிற மனிதர்களிடத்திலும் அவர்களின் செயற்பாடுகளில் கொண்டுள்ள ஆர்வத்தின் அடிப்படையிலும் இலக்கியம் படைக்கப்படுகின்றது.
இந்த இலக்கியத்தினூடாகப் பல பயன்கள் உருவாகின்றன. தான் இந்த உலகத்தைக் காணும் விதத்திற்கு அப்பால் அது பற்றிய கற்பனைகளைப் பெருக்கிக் கொள்வதோடு நயந்தும் விமர்சித்தும் எழுதும் ஆற்றலினால் தம் மொழித்திறனை விருத்தியடையச் செய்வதோடு சமூகத்திற்கு சமூக விமர்சனம் குறித்த பணியையும் நிறைவேற்றுகிறது.
புதிய விடயங்களை அறிந்துகொள்வதோடு பண்பாட்டின் அடிப்படையில் விமர்சன ரீதியாக எழுதுகின்ற ஆற்றலை வளர்த்துக் கொள்ள முடியும். மக்களை நேர்வழிப்படுத்தவும் அவர்களின் மனக் கிடக்கைகளை வெளிப்படுத்தவும் இவ்விலக்கியம் காலாக அமைகிறது. உணர்ச்சிகளை மொத்தத்தில் மனிதனின் வெளிப்படுத்தும் சிறந்த ஊடகமாக இலக்கியம் தொழிற்படுகின்றது.
அவ்வக் காலத்தில் மனித சமூகம் அநுபவித்த விடயங்களைக் கலைநயம் பொருந்த ஆக்கி எதிர்காலத்தில் வரும் தலைமுறையினருக்கு அதனை ஒரு ஆவணமாகக் கையளிக்கின்ற செயற்பாட்டையும் இலக்கியம் செய்கின்றது. வாசித்து அறிவினைப் பெற்றுக் கொள்வதோடு மாத்திரமன்றி தனிப்பட்ட மனிதர்களின் சுய திருப்திக்கும் பொழுதுபோக்கிற்கும் மகிழ்ச்சியான மன நிலைக்கும் இலக்கியம் உதவுகின்றது.
![]()