சங்ககாலஅகத்திணைஇலக்கியங்களின்தனித்துவமானபண்பு

v  சங்ககால அகத்திணை இலக்கியங்களின் தனித்துவமான பண்பு

களை குறிப்பிடுக.?

  ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் தம்முள் கூடிய

கூட்டத்து துய்த்த இன்பம் இத்தன்மையானது என புலப்படுத்த

i முடியாத அகவயமான உணர்வு அகம் எனப்படும்.

 

  அது அன்பின் ஐந்திணை எனப்படும் அன்புடைக் காமமாகிய

ஐவகை காதல் ஒழுக்கங்கள், கைக்கிளை, பெருந்திணை என

ஏழு வகையான இயல்புடையது.

 

  அன்பின் ஐந்திணை இன்ன பொருளை இவ்வாறு பாட

வேண்டுமென்ற முதல், கரு, உரி என்ற புலநெறி வழக்கின்

அடிப்படையில் தோன்றியது.

 

  அன்பின் ஐந்திணைக்குரிய ஒழுக்கங்களாக குறிஞ்சிக்கு

புணர்தலும், முல்லைக்கு இருத்தலும், மருதத்திற்கு ஊடலும்

நெய்தலுக்கு இரங்கலும், பாலைக்குப் பிரிதலும் என

குறிப்பிடப்பட்டிருந்தன.

 

  அகத்திணைக்குரிய காதற் பாடல்களில் தலைவன் தலைவி

பெயர் சுட்டப்படுவதில்லை என்ற வரையறை பின்பற்றப்பட்டது.

அன்பின் ஐந்திணைக்குள் அடங்காதவை கைக்கிளை,

பெருந்திணை என வகுக்கப்பட்டிருந்தன.

 

  கைக்கிளை என்பது ஒருதலைக் காதல் எனப்படும். அது மூன்று

வகைப்படும்.

i) பருவமடையாத பேதை ஒருத்தியைக் கண்டு காதல்

கொண்டு அவளைப் பற்றியெல்லாம் சொல்லி இன்புறுதல்.

ii) ஒத்த அன்புடைய தலைவனும் தலைவியும் கூடும்

கூட்டத்திற்கு முன் நிகழும் காட்சி, ஐயம், தெளிதல், தேறல்என்னும் நால்வகை நிகழ்வு.

iii) ஏறு தழுவுதல் காரணமாக நிகழும் மணமுறைகள்.

 

  பெருந்திணை என்பது பொருந்தாக் காமம். ஒருவன் ஒருத்தி

யிடம் மிக்க காதல் கொண்டு அவளை அடையப்பெறாமல்

மடல் ஏறுதல். வரைபாய்தல் மூலம் தன்னை மாய்த்துக்

கொள்ளுதலாகும்.

 

  அகத்திணைப் பாடல்கள் நாடக வழக்கினையும் உலகியல்

வழக்கினையும் கொண்டிருந்ததால் அவை பாத்திரக்

கூற்றுக்களாக அமைந்திருந்தன. தலைவன் கூற்று, தலைவி

ப் கூற்று, பாங்கன் பாங்கி கூற்று எனக் காணப்பட்டன.

 

  அகத்திணைப் பாடல்கள் இயற்கையோடு ஒட்டிய உள்ளுறை

பட்கொண்டிருந்தன. உதாரணமாக

குறுந்தொகை செய்யுளில் திருமணத்தின் அவசியத்தை

வலியுறுத்தும்போது தோழி,

"சிறு கோட்டுப் பெரும்பழம் தூங்கிய வாங்கு இவள்

உயிர் தவச் சிறிது காமமோ பெரிது" என தலைவனுக்கு கூறும்

பகுதியைக் குறிப்பிடலாம். மேலும் அரியதோர் உட்கருத்தை

உணர்த்தும் இறைச்சிப் பொருளும் இடம்பெற்றிருந்தது.

 

  சங்ககால அகத்திணைப் பாடல்கள் அகவற் பாவினால்

ஆக்கப்பட்டன.

பிறமொழிக் கலப்பில்லாத தூய தமிழ்ச் சொற்களினால் ஆகிய

மொழிநடை அமைந்து காணப்பட்டது.

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top