தமிழ்ப்பேராசிரியர்களிடையே ஒரு தமிழ்ப் போராளி கட்டுரைத் தொகுப்பு –


1.புகழ்

முனைவர் மு வரதராசன்

திருவள்ளுவர் காலத்தில் புகழ் என்பது ஒருவனுடைய நல்ல பண்புகளையும் நல்ல செயல்களையும் அறிந்தவர்கள் போற்றியுரைக்கும் சொல்லாக இருந்தது. அவன் இறந்தபின்பும் அழியாமல் நிற்பது ஆகையால் அதை எச்சம் (இசை எனும் அச்சம் – 238) என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். சிறு சிறு ஊர்களாகவே நாடு அமைந்திருந்த காலம் அது. பெரிய நகரங்களாக நான்கு ஐந்து ஊர்கள் இருந்தபோதிலும், அந்த நகரத்தின் பகுதிகளைச் சிற்றூர்களைப் போலவே அமைந்திருந்தன. யந்திரத் தொழிற்சாலை, விரைவான போக்குவரவு முதலியன இல்லாமையால், நாட்டிலுள்ள ஊர்களுக்குள் தொடர்பு இப்போது போல் நாள்தோறும் நாழிகைதோறும் பெரிய நகரங்களை எதிர்பார்த்து வாழவில்லை. ஊர் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொருவகைத் தனிமையும் முழுமையும் அமைந்திருந்தன. ஆகையால் நகரங்களின் வாயிலில் சிற்றூர்கள் காத்து நிற்கவில்லை. சிற்றூர்களின் அடிப்படையின்மேல் சிற்சில நகரங்கள் அப்போது அமைந்திருந்தன. இப்போது உள்ள நிலைமையோ முற்றிலும் மாறாது. சிற்றூர்களின் அடிமை வாழ்வையும் திக்கற்ற நிலைமையையுமே இப்போது காண்கின்றோம். ஆகையால் இப்போது புகழ் என்பது நகரங்களில் வாழ்வோருக்கு, அல்லது நகரமக்களால் போற்றப்படுவோருக்கு உரியதாக உள்ளது. இதற்குத் துணையாகச் செய்தித்தாள்கள் என்ற நாகரிகக் கருவி ஒன்றும் உள்ளது. செய்தித்தாள்கள் நகரங்களில் செல்வாக்குள்ளவர்களால் நடத்தப்படுவன. நடத்துவோரின் செல்வாக்குக்கு நகரமக்களில் ஏற்றவாறு செய்தித்தாளின் பெருமையும் சிறப்பும் மிகுதியாக இருக்கும் அந்தச் செய்தித்தாள்களில் எவர் பெயர் உள்ளவர்களின் பெயர்களே வரும். கட்சியமைப்பின் வாயிலாக அரசியல் வரும்? செல்வாக்கு செல்வாக்குப் பெற்றவர்கள், அல்லது பணப்பெருக்கத்தின் வாயிலாகக் கட்சிகளின் ஆதரவைப் பெற்றவர்கள் மட்டுமே செய்தித்தாளில் பெயர் வரக்கூடிய புகழ் நிலை பெறுவார்கள். அவர்களின் பெயர்களையே சிற்றூர்கள்
படித்துப்பாராட்டும்
. செய்தித்தாள்கள் அவர்களைப் புகழ்ந்து சொல்லித்திரியும்.

இது புகழ் என்று கூறத் தக்கதா? பிறனில் விழைகின்றவன் எப்போதும் அழியாமல் நிற்கும் பழியை அடைவான் (145) என்று திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் பிறனில்விழையும் குற்றம் உடையவர்கள் நகரங்களில் பழிக்கு ஆளாவதில்லை; அவர்களில் செல்வாக்குடையவர்கள் செய்தித்தாள்களால் புகழ் பெறுகின்றார்கள்; பழி மறைகின்றது.

ஒறுத்தல் செய்யாமல் பொறுத்தவர்க்குப் பொன்றுந்துணையும் புகழ் உண்டு (156) என்று திருவள்ளுவர் அறிவுறுத்தியுள்ளார்.

எள்ளளவும் பொறுமை இல்லாதவர்கள் ஆயினும், செல்வமும் செல்வாக்கும் கொண்டு புகழ் தேடுகின்றவர்களுக்கே செய்தித்தாள்களின் துணையால் பெரும் புகழ் கிடைக்கக் காண்கின்றோம். பிறர்பொருளை வெளவிப் பழியான செயல்களைச் செய்யக்கூடாது என்றும், செய்தால் சிறந்த அறிவும் பயனற்றதாகும் என்றும் (172,175) திருவள்ளுவர் அறிவுரை கூறியுள்ளார். எவருடைய பொருளையும் வெளவி எவ்வாறோ செல்வராய் முன்னேறிய பிறகு, உலகம் அவரைப் புகழ்ந்து பெருமைப்படுத்தவும் அவருடைய அறிவாற்றலைப் போற்றவும் காத்திருக்கின்றது. “வறியார்க்கு ஒன்று ஈவதே ஈகை” (231) என்றும், அத்தகைய ஈகையால் வருவதே புகழ் (231,232) என்றும் திருவள்ளுவர் கூறியுள்ளார். ஆனால் பசி அறிந்து வறியவர்க்கு உதவும் நல்ல செல்வர் மூலைமுடுக்குகளில் பெயர் அறியப்படாமல் ஒதுங்கி வாழ்கின்றார்கள். வறியவர்களை வீட்டுவாயிலிலும் அணுகவொட்டாமல் துரத்தியடித்துவிட்டுத் தமக்கு நிகரான செல்வர்கள் அணுகி அறத்தின் பெயராலோ ஆடம்பரத்தின் பெயராலோ நன்கொடை கேட்கும் போது பெருந் தொகைகளை வழங்குவோருக்குப் பெரும்புகழ் கிடைக்கின்றது. மக்கள் ஒழுக்கத்தால் மேன்மை அடைவார்கள் என்றும், ஒழுக்கக்கேட்டால் பெரும்பழி அடைவார்கள் என்றும் (137) உண்மையாக ஒழுக்கம் திருவள்ளுவர் உடையவர்களைப் பக்கத்து ஊராரும் அறிந்து புகழவழிஇல்லை; சிலரைப் பக்கத்துத் தெருவாரும் அறிவதில்லை. ஆனால் செல்வாக்கும் செல்வம் உடையவர்கள் எவ்வளவு ஒழுக்கக்கேடு உடையவர்களானாலும் அவர்கள் காலத்தில் பெரும்புகழ் பெறுவதைக் நல்லொழுக்கம் மேன்மைக்கும். தீயொழுக்கம் பழிக்கும் காரணமாக இருந்த நிலைமை மாறி.
இப்போது செல்வம் மேன்மைக்கும் வறுமை பழிக்கும் காரணமாக விளங்கும் நிலைமை வந்துள்ளதாக எண்ண வேண்டியிருக்கும்.

இவ்வாறு நேர்ந்துள்ள மாறுதலையும்
எண்ணினால்
புகழைஅண்மைப் புகழ்என்றும், “சேய்மைப் புகழ்என்றும் இரு வகையாகப் பிரித்து உணரும் முறையின் சிறப்புத் தெளிவாகும். அண்மைப் புகழ் அவனுடைய என்பது வாழும் சுற்றி ஒருவனைச் மக்கள் நற்பண்புகளையும் நற்செயல்களையும் அறிந்து புகழ்வது, சேய்மைப் புகழ் என்பது ஒருவனைச் சுற்றியுள்ளவர்கள் வெறுத்தாலும் பழித்தாலும், தொலைவில் உள்ளவர்கள் அவனுடைய உண்மையான பண்புகளை அறியாமல் சிற்சில செயல்களை மட்டும் அறிந்து புகழ்வது. திருவள்ளுவர் காலத்தில் சிறப்பாக விளங்கியது அண்மைப் புகழ் ஆகும். அக்காலத்தில் சேய்மைப்புகழ் விளங்குவதற்கு வேண்டிய வாய்ப்பு மிகக் குறைவு.

இக் காலத்தில் போக்குவரவுப் பெருக்கமும், ஊர்களின் பிணைப்பும், செய்தித்தாள்களின் செல்வாக்கும் புது வகையில் பெருகியிருத்தலால் சேய்மைப் புகழ் ஓங்க வழி அமைந்தது; அண்மைப் புகழ் தேயக் காரணம் ஆயிற்று; திருவள்ளுவர் கூறிய அறநெறியில் வாழ்கின்றவர்களுக்குப் புகழ் பெறும் வாய்ப்பு மிகக் குறைந்தது.

அண்மைப் புகழ் இன்றும் ஓரளவு உள்ளது. நற்பண்பும் நற்செயலும் உடையவராய்ச் சிற்றூர்களில் வாழ்வோரைச் சுற்றுப்பக்கத்தில் உள்ளவர்கள் ஊரளவு அறிந்து புகழ்கின்றார்கள். பேரூர்களில் அவர்களோடு நெருங்கிப் பழகுகின்றவர்கள் மட்டும் அறிந்து போற்றும் நிலைமை உள்ளது.

சேய்மைப் புகழ் உண்மையின் அடிப்படையில் அமைவதும் உண்டு; உண்மையின் அடிப்படை இல்லாமல் அமைவதும் உண்டு. உண்மையாகவே நல்ல பண்புகளும் நல்ல செயல்களும் நிறைந்த ஒருவருடைய புகழ் அண்மையிலும் பரவி,
செல்வாக்கின் காரணமாகச் சேய்மையிலும் பரவுதல் உண்டு. ஆனால் இது மிகச் சிறுபான்மை. பெரும்பான்மையும் தனிப்பட்ட வாழ்க்கையில் ஒழுக்கக்கேடு முதலிய குறைபாடு மிக்கவர்கள் அவற்றை எல்லாம் செல்வம் செல்வாக்கு வாயிலாக மறைத்துச் செய்தித்தாள்களைப் பயன்படுத்திக் கொண்டு புகழுடையவர்களாக விளங்க முடிகின்றது.

இத்தகைய சேய்மைப் புகழைப் புகழ் என்னும் தூய பெயரால் குறிப்பதும் பொருந்தவில்லை. ஆகையால் விளம்பரம் என்னும் பெயரால் குறிக்கலாம். ஏன் எனில் மருந்து முதலிய பொருள்களை விற்பவர் அவற்றை விளம்பரப்படுத்திப் பயன் அடைவது போல்,
இவர்களும் தம் பெயரை விளம்பரப்படுத்திப் பயன் அடைகின்றார்கள்; அல்லது அந்த விளம்பரத்தால் செய்தித்தாள்களோ கட்சி முதலிய அமைப்புகளோ பயன் அடைகின்றன. மருந்து முதலிய பொருள்களுக்கு வாணிக முறையில் விளம்பரம் செய்தலும் திருவள்ளுவர் காலத்தில் இல்லை; மக்கள் பெயரைச் செய்தித் தாள்களால் விளம்பரப்படுத்தலும் அக்காலத்தில் இல்லை. ஒரு மருத்துவரிடத்தில் நல்ல மருந்து ஒன்று இருந்தால் அதனால் பயன் கண்டவர்கள் ஒருவர் மற்றொருவரிடமாக ஊர்முழுவதும் சொல்வார்கள்; அப்படியே சுற்றுப்புறத்தில் மருந்தின் நல்ல பெயர் பரவிடும்; இதுவே பழங்காலத்து மருத்துவர் கண்ட முறை. போலி மருந்துகள் அக்காலத்தில் வாழ முடியாது; பெயரெடுக்க முடியாது; தோன்றிய இடத்திலேயே பழிக்கப்பட்டுப் பரவாமல் அழிந்துபோகும்.

ஆனால் இக்காலத்திலோ பயனுள்ள நல்ல மருந்து மூலையில் முடங்கி ஒருவருக்கும் தெரியாமல் கிடப்பதும் உண்டு; போலி மருந்து அளவற்ற விளம்பரம் காரணமாக நாடெங்கும் பரவி ஏராளமாக விற்பனை ஆவதும் உண்டு. காரணம் என்ன?
பயனுள்ள நல்ல மருந்து உடையவர் ஏழை மருத்துவராகச் சிற்றூரில் வாழ்வார். போலி மருந்து உடையர் செல்வராய் நகரத்தில் வாழ்ந்து பல செய்தித்தாள்களிலும் சுவரொட்டிகளிலும் படக்காட்சிகளிலும் பரக்க விளம்பரம் செய்யும் ஆற்றலுடையவராய் இருப்பார். இத்தகைய விளம்பரம் இல்லாத காரணத்தால் நற்பண்பும்நற்செயலும் உடையவரின் புகழ் பரவாமல் சிற்றூரில் ஒரு மூலையில் இருக்கலாம்.

ஒழுக்கமுடைய நல்ல செல்வர் செல்வாக்கு இல்லாமல் ஒடுங்கியிருக்கலாம்; ஒழுக்கம் கெட்டவராய் அறத்தை மறந்த செல்வர் நகரத்தில் பலர் அறிய வாழ்ந்து செல்வாக்குப் பெற்று விளம்பரமாகவாழலாம். இந்த நிலைமை இருப்பதால் இக்காலத்தில் புகழை நாடி வாழ்வதும் குற்றமாகக் கருதப்படுகின்றது. திருவள்ளுவர் இக்காலத்து விளம்பரத்தைப் புகழ் என்று கூறவில்லை. ஒருவனுடைய அறவொழுக்கத்தின் அடிப்படையாக எழுந்து விளங்குவதையே அவர் புகழ் எனும் பெயரால் விளக்குகின்றார். அதனால் தான் பொது வாழ்க்கைப் பகுதியாகிய அரசியல் பற்றிய பொருட்பாலில் அதைக் கூறாமல், அறத்துப்பாலில் கூறுகின்றார்; அறத்தின் பகுதியாகவே கருதி விளக்குகின்றார்; இல்வாழ்க்கை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை அறநெறியின் பகுதிகளாக கூறியவாறே அவற்றை அடுத்துப் புகழ் என்பதையும் கூறுகின்றார்.

வறியவர்க்குக் கொடுத்து உதவ வேண்டும்; அதனால் புகழ் பெற வேண்டும்; இத்தகைய வாழ்வைத் தவிர உயிர்க்கு வேறு பயன் இல்லை. உலகத்தில் புகழ்ந்து சொல்பவர் சொல்வன எல்லாம் இரப்பவர்க்கு இயன்ற ஒரு பொருளைக் கொடுப்பவர்மேல் நிற்கும் புகழே ஆகும்.

ஈதல் இசைபட வாழ்தல் அது அல்லது

ஊதியம் இல்லை உயிர்க்கு. (231)

உரைப்பார் உரைப்பவை எல்லாம் இரப்பார்க்கொன்று

ஈவார்மேல் நிற்கும் புகழ். (232)

வாழ்க்கையில் ஏதாவது ஒரு துறையில் முன்நின்று தோன்றுவதானால் புகழோடு விளங்க வேண்டும். அத்தகைய நிலைமை இல்லாதவர்கள் அந்தத் துறையில் ஈடுபட்டுத் தோன்றுவதைவிட ஈடுபடாமல் அமைதியாக ஒதுங்கியிருப்பதே நல்லது. புகழ் விளங்க வாழ முடியாதவர்கள் தம்மிடம் அதற்கு உரிய நல்ல பண்பும் நல்ல செயலும் இல்லையே என்று தம்மையே நொந்துகொள்ளவேண்டும்; அவ்வாறு தம்மை நொந்துகொள்வதை விட்டு இகழ்ந்து கூறுகின்றவர்கள் மேல் நோவது ஏன்?

தோன்றின் புகழொடு தோன்றுக; அஃதிலார்

தோன்றலின் தோன்றாமை நன்று.

புகழ்பட வாழாதார் தம்நோவார் தம்மை

இகழ்வாரை நோவது எவன்?

நன்றி

நூல்திருவள்ளுவர் அல்லது வாழ்க்கை விளக்கம்

சுமங்கலிப் பெண்களே எல்லாச் சடங்குகளையும் செய்ய வேண்டும்

உலகில் நன்னெறி முறைப்படி, திருமணம், பூப்புனித நீராட்டல் முதலிய விழாக்களில் இருட் சாதித் தத்துவச் சாத்திரக் குப்பைகளை எல்லாம் தள்ளிக் கண்மூடி வழக்கங்களை எல்லாம் மண்மூடிப்போகவிட்டு, ஒழுக்கமும் அறிவுமுள்ள பெரியார் ஒருவரை முன்னதாகக் கொண்டு அவர் முன்னிலையில் பதி விளக்கு, குட விளக்கு முதலிய திருவிளக்குகளை ஏற்றிச் சுமங்கலிப் பெண்கள் எல்லாச் சடங்குகளையும் செய்வித்து, கடவுளை வழிபாடு செய்து தாலி கட்டுதல், நன்னீராட்டுதல் முதலிய விழாக்களைச் செய்வித்தல் வேண்டும். சாதி சமய வேறுபாடு ஒன்றும் பாராட்டலாகாது.

வடலூர் வள்ளலார்

 

 

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top