1. ‘கானல்
வரி‘ என்ற பாடப்பரப்பை அடிப்படையாகக் கொண்டு பின்வருவன வெளிப்படுமாற்றை விளக்குக?
அ. சோழ மன்னனின் பெருமை
ஆ. காவேரி நதியின் வளமும் சிறப்பும்
இ. சோழ மன்னனின் நிலைபேறுடைய ஆட்சிக்குக் காரணம் என இளங்கோவடிகள் குறிப்பிடும் சான்றுகள்.
அ. சோழ மன்னனின் பெருமை
மாலை அணிந்த முழுமதி போன்றவன்; வெண்கொற்றக் குடையை உடையவன்.
செங்கோல் செலுத்தி முறையான ஆட்சி செய்பவன்.
நிலைத்த புகழ்மாலை சூடியவன்; சோழவள நாட்டை ஆண்டவன்.
நீதி திறம்பாத அதாவது வளையாத செங்கோல் ஓச்சி ஆட்சி புரிந்தவன்.
அரணிடத்தே காவல் செய்யவும், வீரரின் போர் ஒழுக்கத்தை உடையவன்.
சோழ வேந்தன் திருந்து (செம்மையான) செங்கோல் வளையாமை உடையவன்.
பகைவர்க்கு அச்சம் தரும் வேலின் ஆற்றல் கொண்டவன்.
உயிர்களைப் பாதுகாக்கும் ஆணைச் சக்கரத்தைச் செலுத்துபவன்.
நடுவு நிலைமை பிறழாத தன்மை கொண்டவன்.
பகலைத் தரும் சூரியகுல மாமன்னன்.
ஆ. காவேரி நதியின் வளமும் சிறப்பும்
புதுப்புனல் பெருகி வந்தது கண்டு உழவர்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரிக்கும் சிறப்புடையது.
கரைகளையும், வரப்புகளையும் உடைத்தும் பாய்கின்ற நீரோசை கொண்ட பெருக்கமுடையது.
இருபக்கமும் வண்டுகள் ஒலிக்க, அழகிய பூவாடை போர்த்து, கரிய கயல் போலும் கண் விழித்து அசைந்து நடந்தனை காவேரி.
சோழவள நாட்டை மகவாகவும், அதனை வளர்க்கும் தாயாகி நின்று ஊழிக்காலம் வரை நீர்வளத்தினால் பேருதவி புரிதலும், ஒருபோதும் அவ்வுதவியை நிறுத்தியதும் இல்லை.
இ. சோழமன்னனின் நிலைபேறுடைய ஆட்சிக்குக் காரணமான சான்றுகள்.
அரணிடத்தைக் காவல் செய்யவும், வீரரின் போர் ஒழுக்கத்தை உடைய ஆட்சிச்சிறப்பு.
சோழ வேந்தனின் திருந்து செங்கோல் வளையாமை. (செம்மை நெறியில் ஆட்சி செய்தல்).
பகைவர்களுக்கு அச்சத்தைத் தரும் வேலின் ஆற்றல்.
உயிர்களைப் பாதுகாக்கும் ஆணைச் சக்கரத்சைச் செலுத்தும் மாமன்னன் சோழனின் நடுவுநிலமை பிறழாத தன்மை.
மன்னன் சூரியகுல வழித்தோன்றல்.
2. பின்வரும் அடிகளில் இழையோடும் இலக்கியச் சிறப்பினை (நயம்) விளக்குக.
அ. ‘மன்னு மாலை வெண்குடையான் வளையாச் செங்கோல்…’
நிலையான புகழ்மாலை சூடியவன் சோழ வேந்தன்; அவன் என்றும் முறை திறம்பாது செங்கோலைச் செலுத்துபவன்.
இவ் அடிகள் மூலமாக சோழ மன்னனின் பெருமையும், புகழும் காட்டப்படுவதோடு அவனது ஆட்சிச் சிறப்பும் போற்றப்படுகிறது.
* மாற்றமடையாத புகழ் மாலையைத் தொடர்ந்து சூடியுள்ளவன். புகழ் மாலை உருவக அணி. புகழாகிய மாலையை அணிந்தவன்.
என வரும் வெண்கொற்றக் குடையையுடையவன். வெற்றி பொருந்திய ஆட்சி.
நீதிநெறி திறம்பாத செங்கோலாட்சி கொண்டவன்.
இவ் அடிகள் மூலமாகச் சோழ மன்னனின் சிறப்பும், ஆட்சிச் சிறப்பும் போற்றப்படுகின்றது.
ஆ. ‘மருங்கு வண்டு சிறந்தார்ப்ப மணிப் பூவாடை அது போர்த்து…’
இருபக்கமும் வண்டுகள் மிக்குஒலிக்க, அழகிய பூவாடை போர்த்து எனப் பாடப்படுகிறது. காவிரியைப் பார்த்து மாதவி அதன் செழிப்பையும், அதன் அழகையும் கண்டு வியக்கின்றாள்.
காவிரி ஆற்றின் சோலையிலே வண்டுகள் இருபுறமும் ரீங்காரம் செய்கின்றன.
அழகிய பூக்களால் நிரம்பிக் காணப்படுகிறது. இவை காவிரி ஆற்றின் செழிப்பைக் காட்டி நிற்கின்றது.
இ. ‘வாழியவன் தன் வளநாடு மகவாய் வளர்க்கும் தாயாகி ஊழி உய்க்கும் பேருதவி ஒழியாய்…’
சோழ மன்னனின், சோழ வள நாட்டை மகவாகவும், அதனை வளர்க்கும் தாயாகவும் ஊழிக்காலம் வரைக் காவிரியாறு பேருதவி செய்து வருவதுடன் அதனை நிறுத்தியதும் கிடையாது. இங்கே காவிரி ஆறு சோழ வள நாட்டைக் குழந்தையாகவும், வளர்க்கும் தாயாகவும் ஊழிக்காலம் வரை நிறுத்தாது பேருதவி ஆற்றி வரும் சிறப்புடையது எனப் போற்றப்பட்டுள்ளது.
3. கானல்
வரிப் பாடப்பரப்பில் தரப்பட்டுள்ள அணிகள்
கயல் கண்ணாய் உவமைத்
தொகையாகும்.
போன்ற
என்ற
உவமை
உருபு
வராமையினால்
உவமைத்
தொகையாயிற்று.
கருங்கயற் கண் –
உவமைத்
தொகை.
அனைய,
போன்ற
உவமை
உருபு
வராமையினால்
உவமைத்
தொகையாயிற்று.
புகழ்மாலை
– உருவக
அணி புகழ்
ஆகிய
மாலை
![]()