1. எண்ணங்கள் எவ்வகையெனக் கூறப்பட்டுள்ளன?
சுக நினைவுகளை எழுப்பும் எண்ணங்கள்.
2) துக்கத்தை மூட்டி விடும் எண்ணங்கள்.
3) சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் தரும் எண்ணங்கள்.
4) சோகத்தையும் சோர்வையும் உண்டு பண்ணும் எண்ணங்கள் எனப்பலவகை எண்ணங்கள் உள.
2. துக்கத்தை, துயரத்தை, பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாதவர்கள் எத்தகைய எண்ணங்களைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்?
துக்கத்தை, துயரத்தை, பிரச்சினைகளைச் சமாளிக்க முடியாத அவலத்தைத் தேர்ந்தெடுத்திருப்பார்கள்.
3. வாழ்க்கையின் வெற்றிப்பட்டியலில் இடம் பெறுவோர் யாவர்?
மேம்பட்ட எண்ணங்களைத் தேர்ந்தெடுப்பவர்கள் வாழ்கையின் வெற்றிப்பட்டியலில் இடம் பெறுவர்.
4. வழி தெரியாதவன் நடக்கும்தடுமாற்றப் பாதைகள் எவை?
வருத்தப்படுவது பிரச்சினைகளுக்கு வழி காட்டுவதில்லை. வருத்தத்தை விட்டு விட்டு இந் நிலையிலிருந்து மீள என்ன செய்ய வேண்டுமெனச் சிந்திக்கும் போது தான் வழி பிறக்கிறது. இதை உணராது மனம் நொந்திருப்பதும் பயம், கோபம், பொறாமை, குற்ற உணர்வு, கவலை இவற்றுக்குள்ளாவது வழி தெரியாதவன் நடக்கும் தடுமாற்றப் பாதைகளாகும். நமக்கு நாமே தண்டனை அளித்துக் கொள்வதும் அப்படி தண்டனை அளிப்பதன் மூலம் பெறும் சந்தோஷமும் வருத்தப்படுவதன் மூலம் பிறர் அனுதாபத்தைப் பெறுவதும் வழி தெரியாதவன் நடக்கும் தடுமாற்றப் பாதைகள் எனலாம்.
5. மனிதனின் சிந்திக்கும் திறனை முடக்கி விடுவன எவை?
பயம், கோபம், பொறாமை, குற்ற உணர்வு, கவலை இவற்றைத் தாழ்த்தும் உணர்ச்சிகள் என்பர். இந்தக் கீழ் உணர்வுகள் மனிதனின் சிந்திக்கும் திறனை முடக்கி விடுகின்றன.
6. தத்துவஞானி சாக்ரட்டீஸின் மனைவி செய்த இரு செயல்களும் எவை? அவை குறித்து அவர் கூறியவை யாவை?
சாக்ரடீசின் மனைவி முதலில் குப்பையைக் கூட்டி அவர் தலையில் கொட்டினாள். சற்று நேரம் கழித்து ஒரு வாளி தண்ணீரைக் கொண்டு வந்து உயரே இருந்து அவர் தலையில் ஊற்றினாள். இவையே அவள் செய்த இரு செயல்களாகும். இவை குறித்து அவர், முன்பு இடி இடித்தது இப்போது மழை பெய்கிறது என்று சமாதானமாகக் கூறினார்.
7. இக்கட்டுரையைப் படித்ததன் மூலம் நீங்கள் உணர்ந்து கொண்டவை யாவை?
இப்பாடத்தைப் படித்ததன் மூலம் நாம் மேம்பட்ட எண்ணங்களையே தேர்ந்தெடுக்க வேண்டும் என்ற உண்மையை உணர முடிகிறது. தடுமாற்றப் பாதைகளை விடுத்து நல்ல எண்ணங்களைத் தேர்ந்தெடுத்து அதன் வழிச் செயற்பட வேண்டுமென உணர்கிறோம். கீழ்மட்ட எண்ணங்களைத் தேர்ந் தெடுக்காமால் மேம்பட்ட எண்ணங்களைத் தேர்ந் தெடுத்து வாழ்க்கையின் வெற்றிப் பட்டியலில் இடம் பெற நாம் முயற்சிப்போமாக!
![]()