உலகின் மிகப் பழமையான மொழிகளில் மூத்ததும், முதன்மையானதும் மொழியாக விளங்குவது தமிழ் மொழி. உலகில் உயிருடன் வாழும் மொழிகளில் 2000; ஆண்டுகளுக்கு தொடர்ச்சியான இலக்கிய மொழிநடை கொண்ட ஒரே மொழி தமிழ் மொழியாகும். செம்மை சார் இலக்கியத்தை உடைய மொழியே செம்மொழியாகும். செம்மொழி என்றால் உயர்ந்த தரம் கொண்ட மொழி எனவும் பொருள்படும். சமீபத்திய ஆய்வுகளின் அடிப்படையில் உலகில் கிட்டத்தட்ட 7000 மொழிகள் பேசப்படுகின்றன. அவற்றுள் 2000 அளவு மொழிகள் வழக்குழிந்து விட்டன. யுனஸ்கோ கருத்துப்படி உலகில் உள்ள மொழிகளில் 40 வீதம் (சுமார் 2800) மொழிகள் அளவில்அழியும் ஆபத்துக்கள் உள்ளதாக கூறப்படுகின்றது.
சிறுபான்மை குழுக்கள் பேசும் பல மொழிகள் புதிய தலைமுறையால் கற்றுக்கொள்ளப்படாததால் அடுத்த நூறு ஆண்டுகளில் பல மொழிகள் மறைந்து போகும் அபாயம் உள்ளது. செம்மொழி என்ற அந்தஸ்தில் 13 மொழிகளை காணப்படுகின்றன. அதில் செம்மொழி என்ற தகமை கொண்ட தமிழ் மொழி தொடர்ச்சியாக பேசப்படும் மற்றும் எழுத்து வடிவத்தில் அமைந்திருக்கும் மிகப் பழமையான மொழி என ஆய்வாளர்களால் கருதப்படும் மொழியாக தமிழ் மொழி விளங்குகிறது.
ஒரு மொழி செம்மொழி என்ற தகமை கொண்டிருக்க வேண்டுமானால் பின்வரும் தகமைகள் அதற்கு அவசியம். அந்த வகையில்,
அந்த மொழி பழமையானதாக இருத்தல் வேண்டும்.
வேற்று மொழியிலிருந்து பிரிந்து காணப்படாததாகவும் தனித்த மரபுடையதாகவும் இருத்தல.;
தொடர்ச்சி மற்றும் இலக்கிய பாரம்பரியம் கொண்டிருத்தல.
அந்த மொழியின் இலக்கியங்களில் சிலவேனும் உலக பண்பாட்டின் செல்வாக்கை செலுத்துகின்றனவாக இருத்தல்,
தனித்துவம் கெடாதபடி காலத்திற்கு ஏற்ப மாற்றங்களுடன் தன்னை தகவமைத்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும்
1887ம் ஆண்டு சூரிய நாராயண சாஸ்திரி தமிழ் ஒரு செம்மொழி என பிரகடனம் செய்தார். 2004 ஆம் ஆண்டு இந்திய அரசு தமிழ் மொழி ஒரு செம்மொழி என அறிவித்தது. இதனைத் தொடர்ந்து சங்க இலக்கியங்கள் பதினெண்மேல்கணக்கு நூல்கள் சிலப்பதிகாரம்இ மணிமேகலை ஆகிய இலக்கியங்கள் செவ்விய இலக்கியமாக கொள்ளப்பட்டன.
தமிழில் செவ்வியல் சிறப்புகளில் பிரதானமாக விளங்குவது அதன் தொன்மை ஆகும். உலகளாவிய ரீதியில் தமிழ் மொழியானது ஆய்வுகளின் அடிப்படையில் அதன் வரலாற்றையும் பாரம்பரியத்தையும் இன்று வரை உலக மக்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது. அந்த வகையில் இன்று வரை நடைபெற்று வரும் கீழடி ஆய்வுகள் சங்க காலம் மற்றும் அதற்கு முன்னும் தமிழ் மக்களின் வாழ்க்கை முறை அதாவது அவர்களின் தொழில்இ வீடமைப்புஇ வாழ்வியல் அம்சங்கள நீர் பாசனம்இ கட்டிடக்கலை முதலான பல்வேறுபட்டு விடயங்களை காட்டுவதுடன் அங்கு காணப்படும் கல்வெட்டுக்கள் மற்றும் படிமங்கள் என்பன ஆதரங்களாக நிரூபிக்கப்படுகின்றன. வெளிநாடுகளுடன் வணிகங்களஇ; தொழ்லகள் செய்தல் தொடர்பான கல்வெட்டுக்களும் காணப்படுகின்றன இலங்கை – மலேசியா – சிங்கப்பூர் ஆகிய நாடுகளில், அரச கரும மொழியாக தமிழ் பயன்படுத்தப்படுவது அதன் தொன்மையையும் தொடர்ச்சியையும் பறைசாற்றுகின்றது. Diadpora Studies Journal ட ஆனது உலகில் செயலில் இருக்கும் மொழி என தமிழை அழைக்கின்றது.
உளவியல் மற்றும் சமூக நோக்கில் தமிழை ஆராயும் போது மொழி ஒரு சமூகத்தின் மன அமைப்பையும் பண்பாட்டையும் வடிவமைக்கின்றது. தமிழ் செம்மொழி என்ற அடையாளம் தமிழர்களின் collective Self – esteem ( சமூக – தனிநபர் கூட்டு சுய மரியாதை) உயர்கிறது என ‘டாக்டர் அன்மைஸ்” என்று ஆய்வாளர் கூறுகிறார். சங்க இலக்கியங்களில் காணப்படும் அறம் மற்றும் புறம் ஆகிய பிரிவுகள் மனித மன உணர்ச்சியை பிரதிபலிக்கின்றன இது பழைய தமிழ் வாழ்க்கையின் உளவியல் சான்றாகும் என கலாச்சார உளவியல் அடிப்படையில் ‘பெர்னர”; என்பவர் குறிப்பிடுகின்றார். உலகின் முதன்மையான உளவியல் மற்றும் சமூகப் பதிவுகள் கொண்ட ஒரே மொழியான மொழியாக தமிழ் மொழி உள்ளமை இங்கு சுட்டிக்காட்டுத்தக்கது.
தமிழ் இலக்கிய பரப்பில் ஆரம்ப காலமான சங்க காலம் காலம் தொட்டு பிற்காலம் வரை செவ்வியல் பண்பு விரவி உள்ளன. இவ் இலக்கியங்கள் வாழ்வியல்இ உலகியலை முன்னிறுத்தி காணப்படுவதுடன் இவை ஏனைய மொழிகளில் தோன்றுவதற்கு முன்பு தமிழில் தோன்றியமை என்பது இங்கே சிறப்பு கூறியதாக விளங்குகின்றது.
உலகப் பொதுமறை ஆகிய திருக்குறள் வாழ்க்கை நெறிமுறைஇ பொருளாதார முறை என பல்வேறு பட்ட உலகில் சார்ந்த விடயங்களை கூறும் ஒரு மிக முக்கிய படைப்பு ஆகும் இது இன்றுவரை பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டும் ஆராய்ச்சிக்குp உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்று. உலக ரீதியான விடயங்களை ருniஎநசளயட Universal Psychology பல தரவுகளை வழங்குவதாக Unescso சங்க இலக்கியங்கள் அடிப்படையாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வு அடிப்படையில் இயற்கை மற்றும் மனித வாழ்க்கையில் இணைப்பு உலகில் முதன் முதலில் பதிவு செய்யப்பட்டது என ஆராய்ச்சியாளர்கள் மெய்சிலித்து கூறுகின்றனர். இங்கு காணப்படும் கவிதைகள் சுற்றுச்சூழல் உளவியல் ( Eco Psychology) சார்ந்து பெரும்பாலும் அமைக்கின்றன எனவும் அவற்றுள் பல்வேறு விதமான மனப்பான்மை நடத்தையும் வாழ்க்கை முறையும் சிறப்பாக விளங்குகின்றன என உளவியல் அறிஞர்கள் கூறுகின்றனர்
தமிழ் உலகின் மிக வேகமான டிஜிட்டல் தளங்களில் பரவி பெரும் செம்மொழிகளில் ஒன்றாகும் என Unescso கூறுகின்றது.
மொழிகள் பொதுவாக பிறந்து சிறக்கும். சிறந்தே பிறந்த மொழி தமிழ் மொழி. ஒரு மொழியின் சமூக பயன்பாடு அதிகரிக்கின்ற அளவுக்கே அது வாழும் இந்த வகையில் பார்க்கின்றபோது செம்மொழியான தமிழ் மொழி இன்று வரை இணையம், கல்வி, வணிகம் என பல்வேறு துறைகளிலும் வலுவாக திகழ்கின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது. இதனால் தமிழை உயிரோடு வாழும் செம்மொழி (living classical language) எனப்போற்றப்படுகிறது.
‘ தமிழ் செம்மொழி மட்டுமல்ல
நம் அடையாளம் : நம் உயிர்.”
![]()