இலக்கியத்தை விளங்கிக் கொள்ளுதல்

இலக்கியத்தை விளங்கிக் கொள்ளுதல்


இலக்கியம் இதுதான் என்பதில் இன்னும் தீர்க்கமான ஒரு முடிவு இல்லை. இன்னதுதான் இலக்கியம் என்பதிலும் பல கருத்து முரண்பாடுகள் இன்னும் உள்ளன. இலக்கு+ இயம் என்பது இலக்கியமாகும் என தமிழறிஞர்கள் குறிப்படுகின்றனர். இலக்கு என்பது நோக்கம், கொள்கை, குறிக்கோள் என்பனவற்றை குறிப்பிடுகிறது.இயம் என்பது எடுத்துரைத்தலைக் குறிக்கும் சொல்லாகும். நன்னூல் இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்பல் எனக் கூறுகிறது. இலக்கியம் என்பது மொழியினாலே ஆவதொன்றாகும். தொல்காப்பியம் பொருளதிகாரம் இலக்கியத்தின் பொருள் பற்றியும் அதன் வெளிப்பாடு பற்றியும் விரிவாகக் குறிப்பிடுகிறது.

"
எது இலக்கியம் இல்லை என்று கூறுவது எளிது; எது இலக்கியம் என்று உணர்த்த இயலாது" என்று சாமுவேல் ஜோன்சன் இலக்கியம் பற்றிக் குறிப்பிடுவார்.

இலக்கியத்தை கருத்து நிலையாக பார்ப்பவர்களும் உணர்வு நிலையாகப் பார்ப்வர்களும் உண்டு. சாதாரண நடையிலிருந்து வேறுபட்டு அணி நயங்கள் கொண்ட புதுமையாகத் தோன்றுவனவெல்லாம் இலக்கியமே என்று ரஷ்ய உருவவாதிகள் விளக்குவர். அப்படியென்றால், பிளேட்டோவின்குடியரசையோஅல்லது தோமஸ் மூரின்யுடோப்பியாவையோ எனலாமா? என்ற கேள்விகளும் உள்ளன. இலக்கியம் இவ்வாறு வாசகர்களிடையேயும் விமர்சகர்களிடையேயும் இலக்கியம் பற்றிய முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. இலக்கியம் ஒரு வரையறைக்குள் வராது. இலக்கியம் என்பது ஒரு கலைச் சொல்லே தவிர, இருப்பைக் குறிக்கும் ஒரு பொருண்மைக் கலைச்சொல் அல்ல என அரிஸ்ரோட்டில் குறிப்பிடுவார். இலக்கியம்களைபோன்றது. களை எது, பயிர் எது என்பதனை ஒரு விவசாயியே பிரித்தறிவான் என டெரி ஈகிள்டன் குறிப்பிடுவார்.

இலக்கியம் அது தோன்றிய சூழலிலிருந்து பிறிதொரு சூழலில் வேறுபட்ட பொருளையும் தரக்கூடும். கால மாற்றங்கள், வாசக வேறுபாடுகள் என்பன இலக்கியம் பற்றிய நுட்பமான மதிப்பீடுகளுக்கு வழிவகுக்கின்றன. எனினும் இவை எல்லாவற்றையும் மீறி வாசக மதிப்பீட்டில் தொடர்ந்தும் இலக்கியமாகக் கருதப்படுகின்றவையும் இருந்து வந்திருக்கின்றன.ஹோமரின்இலியட்‘, ‘ஒடிசி‘, ஷேக்ஸ்பியரின் நாடகங்கள், மில்ட்டனின்சொர்க்க நீக்கம்‘, சிலப்பதிகாரம்,இராமாயணம், மகாபாரதம் போன்ற தொல்சீர் இலக்கியங்கள் தொடர்ந்தும் இலக்கியப் படைப்புக்களாக அங்கீகரிக்கப்பட்டே வந்துள்ளன. எனவே, வாழ்வியற் பார்வைகள் மாறினாலும் எல்லா வகையான வாழ்வியற் பார்வைகளுக்கும் பொருத்தமாக அமையும் இலக்கியங்களும் தெளிவாகிறது. உள்ளன என்பது

இலக்கியத்தைப் பற்றி வையாபுரிப்பிள்ளை குறிப்பிடும் கருத்து இங்கு கவனிக்கத்தக்கதாகும்.

ஒரு "இலக்கியம் என்பது கலை (art). இக்கலை கலைஞன் உள்ளத்தில் தோன்றும் முறை தனிப்பட்டது. இலக்கியமாகப் பரிணமிக்கும் முறையும் தனிப்பட்டது. இதன் நேர்கமும் தனிப்பட்டதே. இதனோடு முற்றும் வேறுபட்டது சாஸ்திரம். இது தோன்றும் முறையும் வெளியாகும் முறையும் இதன் நோக்கமும் கலைக்குரியவற்றினின்றும் பெரிதும் வேறுபட்டவையாகும்.

"
கலைஎன்று கூறப்படுவதற்கு அழகுஉணர்ச்சியும் இன்புறுத்தும் நோக்கமும் இன்றியமையாதவை. ‘சாஸ்திரம்என்று கூறப்படுவதற்கு இவ்விரண்டும் அறிவிற்குரிய இன்றியமையாதனவல்ல. விஷயங்களைத் தருதலே முக்கிய நோக்கமாகும். ஒரு மாளிகைக்கு இரண்டு வகையான படங்களை வரைதல் கூடும். ஒன்ற ஒவியப் புலவன் தீட்டும் மாளிகைச் சித்திரம். இன்னொன்று மாளிகை அமைக்கும் கொற்றன் (Architec) வரைந்து கொள்ளும் அமைப்பப் படம் (Plan). சித்திரத்திற்கும் படத்திற்கும் உள்ள வேறுபாடு கலைக்கும் சாஸ்திரத்திற்கும் உண்டு.

கம்பராமாயணத்தை எடுத்துக்கொள்வோம். இது ஒரு கலைக்காவியம். இதிலே, அழகுஉணர்ச்சி ததும்புகிறதா? காவிய இன்பம் சிறந்தோங்குகிறதா?" என்ற கேள்விகளே எழும். இதனோடு தொல்காப்பியத்தை ஒப்பிடுவோம். இப்பெரு நூல் பற்றி, "தமிழ் மொழியின் உண்மையியல்பை இது சரியாகத் தவறின்றித் தெரிவிக்கின்றதா?" என்ற கேள்வி தான் உண்டாகும். இது ஒருழூ சாஸ்திர். உள்ளத்தை உணர்ச்சி வழியில் இயக்குவது கலை என்றும், மக்களுக்கு அறிவுப் பொருள்களை கற்பிப்பது சாஸ்திரம் என்றும் ஆசிரியர் டிக்வின்ஸி கூறியுள்ளார் இவர் கூறியுள்ளதன் திரண்ட கருத்து வருமாறு:

இலக்கியம் என்ற சிரப்பித்துச் சொல்லப்படுவது (கலை) உள்ளத்தை இயக்கும் ஆற்றல் படைத்துள்ளது. பிற எல்லாம் (சாஸ்திரம்) அறிவுப் பொருளடகளைப் பரப்புவது. எழுதப்படுவன எல்லாம் இலக்கியம் என்று பொதுவாகத் தொகுத்து வழங்குகின்றோம். இவற்றிலே இரண்டு இயல்புகளைகட காணலாம். அவ்விரண்டு இயல்புகளும் கலந்து தோன்றுதல் காணப்படினும், தனித்தனியாகப் பிரித்து உணர்தற்கும் இவை இடந்தருகின்றன. ஏனென்றால், இவற்றில் ஒன்று மற்றொன்றொன்றோடு சிரிதும் இணங்காதபஎ அதனைத் துாரத்தே அகற்றி நிறுத்த முயல்கிறது. அவற்றை ஒன்று அறிவிலக்கியம் (Literature of Knowledge) என்றும், மற்றொன்றை ஆற்றல்இலக்கியம் (Literature of Power) என்றும் வழங்கலாம். அறிவிலக்கியம் அறிவுப் பொருள்களைத் தர முயல்கிறது. ஆற்றல் இலக்கியம் உள்ளத்தை ஊக்குவிக்க முயல்கிறது. முன்னது புலனறிவை விருத்தி செய்வது, பின்னது உணர்ச்சியின் மூலமாக போதத்தைத் துணையாகக் கொண்டு, ஆன்மாவையே இயக்குகிறது.அறிவிலக்கியத்தை மதிப்பிடுவதற்கு, "கலையுணர்ச்சியைத் திருப்தி செய்கிறதா? அழகுணர்ச்சி இருக்கிறதா? இன்பம் விளைவிக்கிறதா?" நோக்குதல் வேண்டும். ஆனால் இருவகை இலக்கிய இயல்புகளும் ஒருசேரக் கலந்து வரும் சிறந்த இலக்கியங்களும் உள்ளன. திருவள்ளுவரது திருக்குறள் இவ்வகைக் கலப்பு இலக்கியங்களுக்கு சிறந்த உதாரணமாம்" என

"
இலக்கியத்தைப் பொறுத்தவரையில் அது சொல்லையே குறியீடாகக் கொண்டுள்ளது. சொல் எப்பொழுது குறியீடாகும்? குழந்தையின் வளர்ச்சியில் மொழி வகிக்கும் இடம் பற்றி ஆராய்ந்துள்ள பியாஜே, விகொற்ஸ்கி, லூறியா போன்ற அறிஞர்கள் இது பற்றி விரிவாக ஆராய்ந்துள்ளனர். மனித உள்ளத்தில் கருதுகோள்கள் (Concepts) தோன்றுவதற்கு மொழி அவசியமானது. இவை அநுபவத்தின் அடியாக வருகின்றன. சொற்கள் அனுபவத்தை விளங்கிக்கொள்ள, எடுத்துக்கூற, மீளாக்கஞ்செய்ய உதவுகின்றன. எழுத்தாளன் /கவிஞன் அதனைப் பயன்படுத்தும்போது அனுபவம் தொடர்பு வழியாக

(by Communication)
வாசகன் அல்லது கேட்போன் இடத்தில் ஏற்படுத்தப்படுகிறது."

இலக்கியத்தை அநுபவத்தின் வெளிப்பாடாக அவர் விளக்குகிறபோது "இலக்கியங்களை அவை சித்திரிக்கும் அனுபவ வட்டம், அவ்வட்டத்தின் வரையறை கொண்டு வகுத்துவிடலாம் என்பது புலனாகின்றது. சமுதாய வளர்ச்சி சிக்கலுற்ற சமுதாயத்தைத் தளமாகக் கொண்டு தோன்றும் இலக்கியத்திலும் சித்திரிக்கப்படும் மனித அனுபவத்தின் ஆழமும் அகற்சியும் வேறுபடுவதைக் காணலாம்." இவ்வாறு இலக்கியம் எந்தளவுக்குத் தனிமனித அனுபவத்தின் வெளிப்பாடாக இருக்கிறதோ அதே அளவு சமூக பண்பாட்டு விழுமியங்களைத் தாங்கியதாகவும் இருக்கிறது. இலக்கியங்கள் எந்தச் சமூகத்திலிருந்து பிறக்கிறதோ அந்தச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளில் அது தவிர்க்க முடியாது இருக்கும். இது பற்றி எம்.. நுஃமானின் கருத்தும் இங்கு குறிப்பிடத்தக்கது:

இலக்கியம் முழு மொத்தமான மனித அனுபவத்தின் வெளிப்பாடு என்றுதான் நான் கருதுகின்றேன். கவிஞனும் ஒரு சாதாரண மனிதன்தான். அவன் சமுதாயத்தில் ஒரு அங்கம் என்ற வகையிலே, சமுதாயத்தில் தங்கியிருக்கிறவன் என்ற வகையிலே சமூக, அரசியல் பிரச்சினைகளுக்கு அவன் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அதேவேளை அவன் தனியனாகவும் இருக்கின்றான். அவனுக்கென்று தனிப்பட்ட, क्र (Personal) அனுபவங்களும் பிரச்சினைகளும் உள்ளன. அவை கவிதைகளில் வெளிவருவது தவிர்க்க முடியாதது. அவற்றுக்கும் ஒரு தேவையும் முக்கியத்துவமும் உள்ளன. சிலவேளை ஒரு சமூகப் பிரச்சினையும் ஒரு தனிப்பட்ட அநுபவமும் உறவுடையவையாக ஒன்றாகவே இருக்கலாம். சிலவேளை அவை உறவற்று வேறு வேறாக இருக்கலாம். உதாரணமாகக் காதல் ஒரு தனிப்பட்ட

அனுபவம், ஒரு தனிப்பட்ட பிரச்சினை மட்டுமல்ல. அது ஒரு சமூகப் பிரச்சினையும்தான். ஒரு சமூகப் பிரச்சினை என்ற வகையில் அதற்கு எந்த அளவு முக்கியத்துவம் உண்டோ தனிப்பட்ட அனுபவம் என்ற வகையிலும் அதற்கு அந்த அளவு முக்கியத்துவம் உண்டு. மனித வாழ்வில் இருந்து காதலைப் பிரிக்க முடியாது. ஆகவே கவிதையில் இருந்தும் இலக்கியத்தில் இருந்தும் அதைப் பிரிக்க முடியாது. இது போன்றுதான் ஒரு நண்பனின், ஒரு குழந்தையின், ஒரு தாயின் பிரிவுக்காக, மரணத்துக்காக இரங்கிக் கலங்குவதும்;ஒரு இயற்கை வனப்பில் மனதை இழப்பதும் இது போன்றதுதான். இவற்றுக்கு அரசியல் முக்கியத்துவம் இல்லாவிடினும் இலக்கியத்திலே இவை எல்லாவற்றுக்குமே முக்கியத்துவம் உண்டு. ஏனெனில் இவை மனித அனுபவங்கள்."

இலக்கியம் மனிதனது எல்லா அனுபவங்களையும் வெளிப்படுத்தக் கூடியது என்பதுவே அவர் கருத்தாகும்.

நவீன இலக்கியத்தின் மிக முனைப்பான அம்சங்களில் ஒன்று புதுமையை, மாற்றத்தைப் பிரக்ஞைபூர்வமாக மேற்கொள்வதாகும் என கைலாசபதி கூறுகிறார். உண்மையான வாழ்க்கையை எதிரொலிப்பதுதான் இலக்கியம். கவிஞர்கள் பொய்யர்கள் என்பதால் தன் இலட்சிய சமூகத்தில் அவர்களுக்கு இடம் கிடையாது என்றும் பிளேட்டோ குறிப்பிட்டார். இது ஒரு அபத்தமான சிந்தனையாகும். "இலக்கியம் என்பது அனுபவத் தேறலின் கரைசல்" என முருகையன் குறிப்பிடுகிறார். இலக்கியம் அழகைத் தேடுகிறது. தத்துவம் உண்மையைத் தேடுகிறது. ஆனால், இந்தக் கலை இலக்கியத்தின் தேடல் மிகத் தீவிரமடைந்து விட்டது. இப்போது இலக்கியமும் தத்துவத்தைப் போல உண்மையைத் தேடும் ஒன்றாகிவிட்டது என சிலர் குறிப்பிடுகின்றனர். அன்றாட வாழ்வில் நாம் எதிர்கொள்ளும் அழகானவை எல்லாவற்றையும் கலை இலக்கியங்களாக மனம் ஏற்க முனைகிறது. ஆனால், அசிங்கமானவைகளில் அழகைத் தேட முடியாதா என்று கேட்க வேண்டியிருக்கிறது. இலக்கியம் எப்போதும்

உணர்ச்சிகளின் நுட்பமான வெளிப்பாடாக அமைகிறது. மனிதன் உணர்ச்சிகளின் கலவையாக உள்ளான். இதனால்தான் துன்ப இலக்கியங்கள் மீதான ஆர்வமும் அவை ஏற்படுத்தும் உணர்ச்சியும் மனதுள் இனம் புரியாத சலனங்களை ஏற்படுத்துகின்றன.

மேலும், இலக்கியம் பற்றிய பேராசிரியர் கா. சிவத்தம்பியின் பின்வரும் மேற்கோளோடு இக்கட்டுரையை நிறைவு செய்ய முடியும்.

"01.
சமூகத்திலுள்ள எல்லாப் பிரச்சினைகளும் இலக்கியத்தில் இடம்பெறுவதில்லை.

02.
அன்றாட சமூக வாழ்க்கையிலே தொழிற்படும் சக்திகளை இனங்கண்டறிந்து இலக்கியத்துட் புகுத்துவது எல்லா இலக்கியக்காரராலும் செய்யப்படக் கூடிய ஒன்றன்று. முன்னோடிகள் பெரும்பாலும் மேதைகளே.

03.
இலக்கியம் என்பது வெறும் கருத்துக் கோவையன்று. அது அழகுணர்ச்சியுடன் சம்பந்தப்பட்டது. கருத்தாழமற்ற, ஆனால் கலையழகுள்ள ஓர் ஆக்கம் இலக்கியமாகக் கருதப்படலாம். ஆனால், கலையழகற்ற கருத்தாழமுள்ள ஆக்கம் இலக்கியமாகாது.

இவற்றினைத் தொகுத்துஇலக்கிய ஆக்கம் என்பது ஒரு சமூக அழகியல் நிகழ்வுஆகும்" என்று கூறலாம்.

 

Loading

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Scroll to Top